Wednesday, February 23, 2011

இந்து ஆலயங்கள் சேதப்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவும் யோகேஸ்வரன் எம்.பி

இந்து ஆலயங்கள் சேதப்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவும் யோகேஸ்வரன் எம்.பி.
Tuesday, 22 February 2011 10:16
களுவாஞ்சிக்குடி நிருபர் : மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த சில வாரங்களாக ஐந்துக்கு மேற்பட்ட ஐந்து ஆலயங்களின் கதவுகள் உடைக்கப்பட்டு நிதிகள் பொருட்கள் திருடப்பட்ட சம்பவங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவற்றை தடுப்பதற்கான நடவடிக்கையை விரைவாக மேற்கொண்டு இவற்றில் ஈடுபடுபவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் தகுந்த நடவடிக்கைக்கு உட்படுத்துமாறும் பொலிஸாருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் மூலம் இரகசிய குழுக்களையும் அமைத்து செயற்படுத்தி வருவதுடன் இந்து ஆலயங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது மிகவும் கண்டிக்கத்தக்கதுடன் இது பின்னர் மதப்பிரச்சினையை உருவாக்கவும் வழிகோலிவிடும் எனவும் தெரிவித்தார்.

விரைவில் இவற்றின் சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்படுவர் என உறுதியாக நம்புவதாகவும் கூறியுள்ளார்.இந்து ஆலயங்களில் இடம்பெறும் இச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை கைது செய்வதற்கு ஆலயங்கள் ரீதியாக கண்காணிப்பு குழுக்களையும் பேரவை தலைவர் ஏற்படுத்தி வருகின்றார்.

மாவட்டத்தின் எல்லைப் புறங்களிலுள்ள இந்து ஆலயங்களை புனரமைப்பதற்கும் அவற்றின் மூலம் தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களை பாதுகாப்பதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்

No comments: