Thursday, February 10, 2011

வள்ளியூரில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

வள்ளியூரில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

First Published : 06 Feb 2011 02:26:13 PM IST
Last Updated
:

வள்ளியூர், பிப். 5: இந்து முன்னணி மாநிலத் தலைவர் அரசு ராஜா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வள்ளியூரில் இந்து முன்னணியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்துமுன்னணி மாநிலத் தலைவர் அரசு ராஜாவை போலீஸôர் சில தினங்களுக்கு முன்னர் விக்கிரமசிங்கபுரத்தில் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர். இதைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் தங்கவேலு தலைமை வகித்தார்.

தூத்துக்குடி மாவட்டப் பொதுச்செயலர் சக்திவேல், கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் செல்லம், திருநெல்வேலி மாநகர மாவட்டத் தலைவர் நெல்லை பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments: