Tuesday, February 22, 2011

பிரேமானந்தா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும்: இந்து மக்கள் கட்சி

க்ர்ப்பிணி இந்து பெண்களையும் குண்டு வைத்து கொன்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு மஸாஜும் சிக்கன் பிரியாணியும் அளிக்கும் கருணாநிதி அரசு, அடிப்படை மருத்துவ வசதி கூட கொடுக்காமல் பொய் கேஸ் போட்டு ஸவாமி பிரேமானந்தாவை ஜெயிலில் அடைத்து கொன்றதை விசாரணை மூலம் வெளி கொணர வேண்டும்.

பிரேமானந்தா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும்: இந்து மக்கள் கட்சி

[ செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011, 03:32.56 AM GMT +05:30 ]

சாமியார் பிரேமானந்தா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்திட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:



கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேமானந்தா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆயுள் தண்டனை கைதியாகவே காலமாகிவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.



கோவையில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்குக் கூட தமிழக அரசு பொதுமன்னிப்பு வழங்கியது. ஆனால் பிரேமானந்தாவை மருத்துவ சிகிச்சைக்காகக் கூட விடுதலை செய்யவில்லை.



பிரமோனந்தாவுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, பிரேமானந்தாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.



அதேபோல, அவரோடு சிறையில் அடைக்கப்பட்ட கமலானந்தா உள்பட அனைவருக்கும் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என்று அறிக்கையில் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

No comments: