Wednesday, February 23, 2011

சென்னை அருகே அனாதை காப்பகத்தில் பெண் கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரியார் கைது

தமிழர்களே, கிறிஸ்துவர்களை அண்டவிடாதீர்கள். கிறிஸ்துவர்களோடு சிறுவர் சிறுமியரை பழக விடாதீர்கள்.

இந்து அனாதை இல்லங்களை உருவாக்குங்கள். கிறிஸ்துவ அனாதை இல்லங்கள் என்ற பெயரில் நடக்கும் அசிங்கங்களை கண்டுகொள்ளுங்கள்.


--
சென்னை அருகே அனாதை காப்பகத்தில் பெண் கற்பழிப்பு

கிறிஸ்தவ பாதிரியார் கைது

மீஞ்சூர், செப்.6-

சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகே அனாதை காப்பகத்தில் பெண் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டார்.

அனாதை காப்பகம்

மீஞ்சூர் அருகே உள்ள வேலூர் கிராமத்தில் `சத்தியம் சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற அனாதை காப்பகத்தை நடத்தி வந்தவர் சாது இம்மானுவேல் என்ற கிறிஸ்தவ பாதிரியார். 1988-ம் ஆண்டு முதல் இந்த அனாதை காப்பகம் செயல்பட்டு வருகிறது. காப்பகத்தில் 8 பெண்களும் 2 சிறுவர்களும் தங்கி இருந்தனர். இந்த காப்பகத்தில் தங்கியவர்களை சாது இம்மானுவேல் படம் பிடித்து அனாதைகள் என கூறி வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று வந்ததாகவும் இவர்களிடம் உண்டியலை கொடுத்து சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் பண வசூலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து இந்த காப்பகத்தில் உள்ள பெண்கள் சென்னையில் காப்பகம் நடத்திவரும் ஜெயராஜ் என்பவரிடம் தெரிவித்தனர். மேலும் காப்பகத்தில் தங்கியிருந்த ரேவதி என்ற பெண் மீஞ்சூர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

கற்பழிப்பு

இந்த காப்பகத்தில் தங்கியிருந்த விஜயாவை (வயது 20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாதிரியார் சாது இம்மானுவேல் கற்பழித்ததையடுத்து அவர் கர்ப்பம் அடைந்தார். தன்னால் கற்பழிக்கப்பட்டதை மறைக்க, சாது இம்மானுவேல் விஜயாவுக்கு அரசு அனுமதி பெறாத தனியார் டாக்டர்கள் மூலம் கருகலைப்பு நடத்தி உள்ளார். ஆகவே பாதிரியார் சாது இம்மானுவேல் மீது தக்க நடவடிக்கை எடுத்து எங்களை காப்பற்ற வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட சப்இன்ஸ்பெக்டர் அரிகரபுத்ரன் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாரங்கன் உத்தரவின் பேரில் பொன்னேரி துணைசூப்பிரண்டு ரங்கராஜன் மேற்பார்வையில் மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் முன்னிலையில் போலீசார் வேலூர் அனாதை காப்பகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கைது

திருவள்ளூர் கலெக்டர் பழனிகுமார் உத்தரவின் பேரில் பொன்னேரி தாசில்தார் லலிதா திடீர் என வேலூர் காப்பகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். காவல்துறையினரும் வருவாய்துறையினரும் இணைந்து ஆய்வு செய்த நிலையில் அரசு விதிகளுக்கு புறம்பாக பதிவுசெய்யாமல் காப்பகம் நடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காப்பகத்தில் இருந்த பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு ஈடுபடுத்தியதும் குழந்தைகளை சித்ரவதைக்கு உட்படுத்தியதும் தெரியவந்தது. பதிவேடு கணக்கு வழக்குகள் சரியாக இல்லாததையடுத்து காப்பகம் மூடி சீல் வைக்கப்பட்டது.

காப்பகத்தில் இருந்த பெண்கள் மற்றும் சிறுவர்களை மீஞ்சூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து பாதிரியார் சாது இம்மானுவேல் கைது செய்யப்பட்டு பொன்னேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி ராஜ் உத்தரவின் பேரில் பாதிரியார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். காப்பகத்தில் தங்கியிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் திருவள்ளூரில் உள்ள சமூக நல காப்பத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தினத்தந்தி:

Times of India: Pastor arrested for raping inmate of church shelter

No comments: