கோழிகோடு குண்டுவெடிப்பில் 5 பேர் பலி, 3 பேர் படுகாயம்
ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 27, 2011, 15:15[IST] A A A
கோழிகோடு: கோழிகோட்டில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 5 பேர் பலியாகினர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள நடபுரம். அங்கு சட்டவிரோதமாக வெடிகுண்டு தயாரிக்கப்பட்டு வந்தது. அத்தகைய குண்டு ஒன்று இன்று வெடிதத்து. இதில் 5 பேர் பலியாகினர், பலர் காயம் அடைந்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது,
குண்டு வெடித்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயம் அடைந்த 5 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் இறந்தனர். மேலும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 3 பேரில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.
அன்மை காலமாக நடப்புரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு இடையே உள்ள அரசியல் காழ்ப்புணர்வால் அமைதியின்றி காணப்படுகின்றன.
சமீபத்தில் பதிவாகியுள்ள 15 வழக்குகளில் 8 வழக்குகள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது தொடர்பாகத் தான். போலீஸ் உயர் அதிகாரிகள் இந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். அங்கு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
நடப்புரம் பகுதியைச் சேர்ந்த ரியாஸ், சமீர், ஷபீர், ஷபில் மற்றும் ரபீக் ஆகியோர் தான் தற்போது நடந்துள்ள குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றனர்.
English summary
1 comment:
தன்வினை தன்னைச்சுடும்
Post a Comment