Thursday, February 10, 2011

கோயில்கள் இடிப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணியினர் 36 பேர் கைது

கோயில்கள் இடிப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணியினர் 36 பேர் கைது

First Published : 09 Feb 2011 09:30:10 AM IST
Last Updated :

கோவை, பிப். 8: மேம்பாலம் அமைப்பதற்காக கோயில்களை இடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

காந்திபுரம் பகுதியின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மேம்பாலம் கட்டப்படும் என செம்மொழி மாநாட்டின்போது, தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

மேம்பாலம் கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட ஆரம்ப கட்டப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வருகிறது.

மேம்பாலத்தின் ஒரு பகுதியாக சத்தி சாலை - நூறடி சாலை சந்திப்பில் மூன்றடுக்கு ரவுண்டானா கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலின் ஒரு பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புகள், கடைகளை இடித்து நில ஆர்ஜிதம் செய்ய நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

÷இந்நிலையில் காந்திபுரம் மேம்பாலத்துக்காக பழமையான கோயில்களை இடிக்கக் கூடாது எனக் கூறி இந்து முன்னணியினர், ஐயப்பன் கோயில் முன்பு செவ்வாய்க்கிழமை திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

÷"150 ஆண்டுகால பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோயில், 400 ஆண்டு பழமையான முனீஸ்வரர் கோயில், 2-வது சபரிமலை என கோவை மக்களால் வணங்கப்படும் சித்தாபுதூர் ஐயப்பன் கோயில் உள்பட பல்வேறு கோயில்கள், மேம்பாலம் கட்டுவதற்காக இடிக்கப்பட உள்ளன. இந்து கோயில்களை குறி வைத்து இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வது கண்டனத்துக்குரியது என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநகர் மாவட்ட செயலர்கள் எஸ்.சதீஷ், ஜெய்சங்கர், குணா, வடக்கு மாவட்டச் செயலர் எல்.சிவலிங்கம், பாஜக மாவட்ட பொதுச் செயலர் மதன்மோகன் உள்பட 36 பேர் கைது செய்யப்பட்டனர்

1 comment:

Arun Ambie said...

இப்படிப்பட்ட போராட்டம், கைது, சிறை, பிரியாணி எல்லாம் ஒரு அளவுக்கு மேல் உதவாது. தேர்தல் வரும்போது மறக்காமல் ஓட்டுப்போடுவதும், ஓட்டை மறுத்தால் அப்போது தீவிரமாகப் போராடுவதுமே சிறப்பு!