சாயக் கழிவுநீர் பிரச்சனை: திருப்பூரில் முழு அடைப்பு
சென்னை, வெள்ளி, 4 பிப்ரவரி 2011( 09:16 IST )
GA_googleFillSlotWithSize("ca-pub-0567817491096263", "Tamil_Article_250x250", 250, 250);
சாயக் கழிவுநீர் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வலியுறுத்தி திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, திருப்பூரிலுள்ள சாயப்பட்டறைகள் மூடப்பட்டு மின்இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகின்றன. இதனால், பனியன் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சாயக் கழிவுநீரை குழாய் வழியே கடலுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் திருப்பூரில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த போராட்டத்துக்கு பா.ஜ.க, பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கம், ஏற்றுமதி சரக்கு லாரிகள் சங்கம், நெல்லை தூத்துக்குடி மாவட்ட நாடார்கள் ஐக்கிய சங்கம், காமராஜர் நற்பணி மன்றம், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.ஆனால் அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட முக்கிய கட்சிகள், தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து 5 ஆயிரம் பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. திருப்பூர், அதன் சுற்று வட்டார பகுதிகளில் இயங்கி வரும் பின்னலாடை நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்து மூடப்பட்டுள்ளன. இதனால் 3 லட்சம் தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை.எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருப்பூர் நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. அரசு பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன.முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. ஒரு சில இடங்களில் ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ - மாணவிகள், அலுவலகத்திற்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.முழு அடைப்பையொட்டி 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவித நிகழ்வுகள் எதுவும் நடைபெறாமல் இருக்க 16 இடங்களில் கண்காணிப்பு கேமிரா வைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.திருப்பூரில் அனைத்து சாய, சலவை ஆலைகளும் மூடப்பட்டதால் ஆலைத் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர்.
No comments:
Post a Comment