இந்தி மொழி வளர்ச்சி : அமைச்சர் பாலு பாராட்டு
நமது டில்லி நிருபர்
"இந்தி மொழியை வளர்ப்பதற்கு உண்டான உறுதியான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுப்பது பாராட்டுக்குரியது' என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
கப்பல் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் போர்ட் பிளேர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு பேசியதாவது:இந்தியாவின் தேசிய மொழியான இந்தியை வளர்ப்பதற்கு உண்டான உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதற்காக கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரிகளை பாராட்டுகிறேன். எனது அமைச்சகம் சார்ந்த அறிக்கைகள், கடிதங்கள், ஒப்பந்தங்கள் உள்ளிட்ட அனைத்து கடிதப் போக்குவரத்துகளுமே இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் மூலம் தான் நடைபெறுகின்றன. ஆண்டுக்கு இருமுறை இந்தி மொழி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்தி மொழி ஷீல்டு திட்டம் மூலம் இந்தி தெரியாத அதிகாரிகளுக்கும் இந்தி கற்பிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதற்காக இணைச் செயலர் அந்தஸ்து அதிகாரியை தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்பட்டு இந்தியை வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தி ஆலோசனைக் குழுவின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. இந்த குழுவின் சார்பில் அளிக்கப்படும் ஆலோசனைகள், பரிந்துரைகள் அனைத்தையும் அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கும்படி அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் பாலு பேசினார்.
நன்றி தினமலர்
---
கலைஞர் மு கருணாநிதி இந்தி பாட்டுப் பாடி வட இந்தியரை காக்கா பிடிக்கிறார்
கப்பல்துறை அமைச்சர் டி ஆர் பாலு, இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே கப்பல் துறையில் என்று பெருமையாக பேசுகிறார்.
என்னப்பா நடக்கிறது இங்கே?
2 comments:
கமிஷன் கப்பல் மந்திரிக்கும் உண்டு இல்லையா?
அதுதான் இந்தி குத்தாட்டம்!
ஊரை ஏமாற்றி பிழைக்கும் கூட்டம்
Post a Comment