Monday, October 22, 2007

சென்னையில் பிரம்மாண்டமான ராமாயண மாநாடு

சென்னையில் ராமாயண மாநாடு
ராமாயண மாலை - கலை நிகழ்ச்சிகள் - கருத்தரங்கம்

ராமநாம ஜப வேள்வி




அன்புடையீர்!

கடவுள் மனிதனாக, மனிதனே கடவுளாக பாரதத்தில் அவதரித்து நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக வாழ்ந்த தர்மத்தின் வடிவமான அவதார புருஷன் ஸ்ரீராமபிரான்.

ஸ்ரீராமன் பதவிகள் வேண்டா புனிதன். பெற்றோர் சொல்லை நிறைவேற்றியவன். நாட்டு நலனுக்காக தன்னலம் துறந்த தூயவன். சகோதர பாசத்தின் இலக்கணம்.


ஸ்ரீராமனுடைய வாழ்க்கையான ராமாயணத்தைப் படித்தால் ஒவ்வொருவர் வாழ்விலும் கவலை எல்லாம் தீரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.


ஸ்ரீராமபக்தி மூலமாக தேசபக்தியை வளர்ப்பதற்காக ராவண சக்திகளின் கடுமையான ராம எதிர்ப்பு பிரசாரத்தை முறியடிப்பதற்காக சென்னையில் ஒரு லட்சம் பக்தர்கள் சங்கமிக்கும் பிரமாண்டமான ராமாயண மாநாடு நடைபெறவுள்ளது.


இந்த மாநாட்டில் ராமாயண பாராயணம், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் மற்றும் ராம நாம ஜப வேள்வியும் நடைபெறவுள்ளது.


இந்த ராமாயண மாநாட்டில் கலந்து கொள்ளும் அன்பர்கள், திருச்சி திருப்பராய்த்துறை சுவாமி சித்பவானந்தர் எழுதியுள்ள ராமாயண உரை நூலை நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தார் அனைவரும் தினசரி 10 பக்கம் படித்து பாராயணம் செய்ய வேண்டும்.



நிறைவாக ஸ்ரீராம ஜய ராம ஜய ஜய ராம என்ற மந்திரத்தை 13 முறை ஜபம் செய்ய வேண்டும்.

சென்னையிலும் சுற்றுப்புறங்களிலும் 1000 குழுக்கள் பாராயணம் செய்ய வேண்டும்.
நவம்பர் 24ம் தேதி பௌர்ணமி தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை இந்த ராமாயண பாராயணம் நடைபெறும்.



டிசம்பர் 23ம் தேதி ராம நாம ஜப வேள்வியும் ராமாயண மாநாடும் நடைபெறும். இதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். இதில் துறவியர் பெருமக்களும் ஆன்றோர்களும் சான்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.

இந்த ராமாயண மாநாடு வெற்றி பெற நல்ல ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. மாநாட்டுப் பணியில் ஈடுபட ஆர்வமுள்ள தர்மத் தொண்டர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்.


இவண்
ராமாயண மாநாட்டுக் குழு
சென்னை.


நன்றி
எடுத்துகொடுத்த நண்பருக்கும்
http://www.prabandham.com/events/07002.html

2 comments:

Anonymous said...

ஸ்ரீ ராமஜெயம்!

எழில் said...

நன்றி அனானி
ஸ்ரீராமஜெயம்