Sunday, October 21, 2007

கொலையான இந்து முன்னணி தலைவர் குடும்பத்திற்கு அர்ஜூன் சம்பத் நிதியுதவி

கொலையான இந்து முன்னணி தலைவர் குடும்பத்திற்கு நிதியுதவி
சனிக்கிழமை, அக்டோபர் 20, 2007



தென்காசி:

தென்காசியில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணியின் நகரத் தலைவர் குமார் பாண்டியனின் குடும்பத்தினருக்கு இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் ஆறுதல் கூறி நிதியுதவி அளித்தார்.

தென்காசியில் இந்து முன்னணி நகர தலைவர் குமார் பாண்டியன் படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நடந்த மோதலில் குமார் பாண்டியனின் சகோதரர்கள் மூன்று பேரும் எதிர் தரப்பில் 3 பேரும் கொலையாயினர்.

இந் நிலையில் இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் குமார் பாண்டியனின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறி ரூ.10,000 நிதியுதவி அளித்தார்.

பின்னர் நிருபர்களிடம் அர்ஜூன் சம்பத் கூறியதாவது, குடும்பத்தில் 4 பேரை இழந்து தவிக்கும் குமார் பாண்டியனின் குடும்பத்தினருக்கு முதல் தவணையாக ரூ.10,000 வழங்கியுள்ளோம்.

திமுக ஆட்சியில் மக்களுடைய நிம்மதி போய் விட்டது. இந்த அரசு தமுமுகவின் சொல்படி நடந்து வருகிறது. குமார் பாண்டியனின் மனைவிக்கு அரசு வேலை அளிப்பதாக உத்தரவாதம் அளித்துவிட்டு ஏமாற்றி விட்டனர்.

அரசியல் கட்சிகள் மதசார்பின்மை என வேஷம் போட்டுக் கொண்டு இந்துகளுக்கு எதிராக செயல்படுகின்றன. குமார் பாண்டியன் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க எங்களால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றார்.

No comments: