காங்கிரசால் பாதிக்கப்பட்டவர் முத்துராமலிங்க தேவர் : வைகோ குற்றச்சாட்டு
மதுரை : "காங்கிரசின் அடக்குமுறையால் பாதிக்கப்பட்டவர் முத்துராமலிங்க தேவர்' என ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சுமத்தினார்.
மதுரையில் நடந்த திருமண விழாவில் வைகோ பேசியதாவது: அ.தி.மு.க., 72 லும், ம.தி.மு.க., 93 லும் உதயமாகி இன்று கைகோர்த்து மக்கள் நலனில் அக்கறை கொண் டுள்ளன. மீனாட்சி கோயிலுக்கு ஒடுக்கப்பட்டோர் நுழைய வைத்தியநாதய்யர் முயற்சி மேற்கொண்டார். அவருக்கு பக்கபலமாக இருந்தவர் முத்துராமலிங்க தேவர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு வரை தேவர் நினைவிடத்துக்கு தலைவர்கள் செல்வதில்லை. தற்போது அனைத்து தரப்பினரும் செல்கின்றனர். நான் 31 ஆண்டுகளாக தேவர் நினைவிடத்துக்கு சென்று வருகிறேன். காங்கிரசின் அடக்கு முறையால் பாதிக்கப்பட்டவர் தேவர். அதனால் அவர் சிறு வயதிலேயே இறந்தார். இல்லையென்றால் அவர் நீண்ட காலம் வாழ்ந்திருப்பார். இவ்வாறு வைகோ பேசினார்.
மைக்கை உதறினார் : ஆவேசமாக வைகோ பேசிக் கொண்டிருந்தபோது அவ்வப்போது "மைக்" கோளாறு ஆனது. அப்போது "டென்ஷன்' ஆகாத வைகோ "தம்பி... இந்த மைக்... சரிவராது, எடுத்து வையுங்கள்' என மைக் ஆபரேட்டரிடம் கேட்டுக் கொண்டார். அப்புறப்படுத்தப்பட்டதும் மைக் இல்லாமலேயே பேசினார். மைக்கை சரி செய்து மீண்டும் எடுத்து வந்தனர். இப்போது "டென்ஷன்' ஆன வைகோ "வேண்டாம்... கொண்டு போங்க... "மைக்' இல்லாலேயே என்னால் பேசமுடியும்' என்றார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் வீரஇளவரசன், ரவிச்சந்திரன், நகர அவைத் தலைவர் சின்னசெல்லம், நகரச் செயலாளர் பூமிநாதன், பொருளாளர் ஆசைத்தம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Dinamalar
No comments:
Post a Comment