Sunday, October 14, 2007

பெண்களிடம் சில்மிஷம் - ஜெயங்கொண்டம் கத்தோலிக்க பாதிரியாருக்கு 'சிறை'

ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 14, 2007 தஞ்சாவூர்:

நன்றி தட்ஸ்டமில்


மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாதிரியாரை பொதுமக்கள் சர்ச்சுக்குள் சிறை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வரதராஜன் பேட்டையில் வின்சென்ட் செபாஸ்டின் (51) என்ற பாதிரியார் அங்குள்ள பேராலயத்தில் பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த வருடம் தஞ்சாவூரில் உள்ள மாதா கோட்டையில் இருக்கும் லூர்து சகாய அன்னை பேராலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்தார். பின்னர் அங்கிருந்து இங்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

லூர்து சகாய அன்னை பேராலயத்திற்குட்பட்டு காவிரி தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 27 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இருக்கின்றன.

இந்த மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு வங்கியில் கடன் உதவி கிடைக்க வேண்டுமென்றால் செபாஸ்டின் கையெழுத்து போட வேண்டும். அப்போது தான் லோன் கிடைக்குமாம். ஆனால் செபாஸ்டின் லோனுக்காக கையெழுத்து கேட்டு வரும் பெண்களிடம், என்னிடம் உல்லாசமாக இருந்தால் உடனடி கையெழுத்து என்று வற்புறுத்தி செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார்.

வேறு வழியில்லாமல் பல பெண்கள் செபாஸ்டினின் காம இச்சைக்கு பலியாகியுள்ளனர். இந்த விவகாரம் அந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்து, அவர்கள் செபாஸ்டினை கண்டித்துள்ளனர். அது தவிர ஊர் கூட்டத்தை கூட்டியும் கடுமையாக எச்சரித்துள்ளனர். இதையடுத்து அவர் ஊரார் முன்பு மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.

மன்னிப்புக் கேட்டதால் அவர் திருந்திவிட்டார் என்று நினைத்த ஊர் மக்களுக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது. திருந்தாத செபாஸ்டின், மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த அந்தோணியம்மாள் (28) என்ற பெண்ணுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.

இதை நேரில் பார்த்த மக்கள் மீண்டும் எச்சரித்துள்ளனர். ஆனால் அவர் திரும்பவும் மன்னிப்பு கேட்பதும், அதன் பின்னர் காம களியாட்டங்களை தொடர்வதையும் வழக்கமாகவே வைத்துள்ளார்.

இது தவிர பேராலயத்திற்கு வாரம் தோறும் பிரசங்கத்திற்கு வருபவர்களிடம், ஆபாச வார்த்தைகளை பேசி அதற்கு அசிங்கமான விளக்கமும் கொடுத்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளார்.

பலமுறை கண்டித்தும் அடங்காத பாதிரியாரை அந்த பதவியிலிருந்து விலக்க கிராம பஞ்சாயத்துத் தலைவி மதிமலர், பங்கு பேரவைக் குழு தலைவர் பிலேந்திரன் தலைமையில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி பிரார்த்தனை கூட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி இன்று காலை பிரார்த்தனை கூட்டத்திற்கு பேராலயம் தயாராக இருந்தபோது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பேராலயம் முன்பு கூடி கோஷங்களை எழுப்பியதுடன், ஆலயத்தின் கதவை இழுத்து பூட்டினர். இதனைக் கண்ட பாதிரியார் செபாஸ்டின் அங்கிருந்து தப்பி சென்று தனது அறைக்குள் சென்று ஒளிந்து கொண்டார்.

இதனை அறிந்த மக்கள் பாதிரியாரின் அறையையும் வெளிப்பக்கமாக பூட்டினர். போராட்டம் குறித்து தகவல் தெரிந்ததும் தஞ்சை நகர போலீசார் விரைந்து வந்து ஊர் மக்களிடம் சமாதானம் செய்யும் விதமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

1 comment:

Anonymous said...

இந்திய தேச சட்டத்தின்படி, அவர் தன்னுடைய தனி மனித சுதந்திரத்தின் படி அவர் பெண்களிடம் சில்மிஷன் செய்வதை ஒரு வித மத விரோத சக்திகள் தடுப்பதாகத்தான் தெரிகிறது. இதைக் கூட செய்வதற்கு இந்திய ஜனநாயகத்தில் உரிமை இல்லையா?. எந்த நிலைமையிலும் கூட அவர்கள் கொடுத்த அடிகளை வாங்கிக் கொண்டு இயேசுவின் கட்டளையக் காப்பாற்றிய மாதிரித் தான் தெரிகிறது. தாங்கள் இப்படிப் பட்ட தவறான பிரசாரங்களைச் கைவிடுவதற்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.