Thursday, October 11, 2007

இந்தியக் கோவில்களைக் குறி வைக்கும் அல் கொய்தா

புதன்கிழமை, அக்டோபர் 10, 2007

நன்றி தட்ஸ்டமில்

டெல்லி:

இந்தியாவில் உள்ள முக்கிய வழிபாட்டு ஸ்தலங்களின் மீது தாக்குதல் நடத்த அல்-கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அனைத்து மாநிலங்களுக்கும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில், இந்தியாவில் பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் அதிகமிருக்கும் வர்த்தக மையங்கள், கோவில்கள் மற்றும் முக்கிய இடங்களின் மீது தாக்குதல் நடத்த அல்-கொய்தா திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நாட்டில் உள்ள முக்கியமான கோவில்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றை கண்காணிக்கும் படி அனைத்து மாநில போலீசாருக்கும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ரம்சான், தசரா மற்றும் இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை என அடுத்தடுத்து வருவதால் அனைத்து ஜவுளி நிறுவனங்கள், மசூதிகள், கோவில்களில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments: