வயதாக வயதாக கலைஞர் நினைவு தப்புக்கிறது. ஞாநிச்ல்வது போல ஓய்வெடுக்கலாம் என்று கருதுகிறென்.
தமிழ் மொழியை காக்க வேண்டும் என்ற உணர்வு இளைஞர்களிடம் மங்கிவிட்டது:கருணாநிதி கவலை
சென்னை : ""தமிழ் மொழியை காக்க வேண்டும் என்ற உணர்வு இன்றைய இளைஞர்களிடம் மங்கிவிட்டது,'' என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.
அகர முதல்வன் கலைஞரின் வரலாறு முதல் முறையாக கலைஞர் காவியம் என்ற பெயரில், கவிஞர் வாலியின் குரலில் படைத்த "சிடி'யின் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு ஆர்.எம்.வீரப்பன் தலைமை தாங்கினார். கமல்ராஜ் வரவேற்றார். கலைஞர் காவியம் "சிடி'யை இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் வெளியிட, திரைப்பட தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன் பெற்றுக் கொண்டார். விழா அரங்கத்தில் முதல்வர் வாழ்க்கை வரலாறு கவிதை நடையில் வாலியின் குரலில் தயாரிக்கப்பட்ட "சிடி'யை, முதல்வர் கருணாநிதி 18 நிமிடம் ரசித்து பார்த்தார். விழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன், ஏவி.எம்.சரவணன், நடிகர்கள் சிவக்குமார், சத்யராஜ், இயக்குனர்கள் வசந்த், பாரதிராஜா, நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோர் பேசினர்.கவிஞர் வைரமுத்து பேசுகையில், ""நாங்கள் எழுத்தை சந்தையில் விற்றோம். ஆனால், நீங்கள் உங்கள் எழுத்தை சந்தைக்கு விற்காமல் சத்தியத்திற்கு மட்டும் எழுதினீர்கள். திரை உலகத்தில் உங்கள் எழுத்து, சந்தைப்படுத்தியிருந்தாலும் சத்தியத்தின் கோட்டை தாண்டவில்லை. முதல்வர் கருணாநிதி ஒவ்வொரு நிமிடத்தையும் நேசிக்கிறார். வாழ்க்கையை ரசிக்கிறார். அதனால், அவருக்கு முதுமை ஏற்படவில்லை. இயங்கிக் கொண்டிருப்பவருக்கு முதுமை என்பது வரம். இயங்காமல் இருப்பவருக்கு முதுமை ஒரு சாபம். 84 வயது கொண்ட உங்களுக்கு முதுமை எட்டவில்லை,'' என்றார்.
விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது: வாலி எனது காவியத்தை எழுத நீண்ட காலமாக அனுமதி கேட்டார். நான் இப்போது வேண்டாம், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தடுத்து நிறுத்தினேன். என்னை அழைத்தால் நான் எப்படியாவது தடுப்பேன் என்பதால், என்னை அழைக்காமல் விழா ஏற்பாடுகளை வாலி செய்தார். காதல் திருமணம் செய்து கொள்ளும் உள்ளங்களைப் போல இந்த நிகழ்ச்சி அமைந்துவிட்டது. நான் இல்லாமல் விழா நடத்த திட்டம் தீட்டினார். கடைசியில் சம்மதம் தெரிவித்து, நானே விழாவில் கலந்து கொண்டேன். வாலி அழைத்ததால் வந்தேன். சுக்ரீவன் அழைத்தால் வந்திருக்க மாட்டேன். ஏனென்றால், சுக்ரீவன் சுயநலத்திற்காக ராமனிடம் நட்பு கொண்டான். இதை நான் சொல்லவில்லை; ராஜாஜி எழுதியுள்ளார். "வாலியை ராமர் கொன்றது நியாயமில்லை' என்றும் ராஜாஜி எழுதினார். இதை நான் சொன்னால் தலை, கை கால்களை வெட்டுவேன் என்று வட மாநில பயில்வான்கள் சொல்கின்றனர். என்னுடைய 16 வயதிலேயே திருவாரூரில் பல மிரட்டல்களை சந்தித்துள்ளேன். வீரமணி பேசும் போது, என்னைப் பற்றி எழுதும் போது வாலி சரியாக எழுத வேண்டும் என்று சொன்னார். வாலி, ராமரைப் பற்றி தவறாக எழுதலாம். வீரமணி கேட்டால் அந்த ராமர், வால்மீகி எழுதிய ராமாயணம் என்று கூறலாம் அல்லது துளசிதாசர் எழுதிய ராமாயணம் என்றும் சொல்லலாம். வால்மீகி எழுதிய ராமாயணத்தில் சீதை ராமனின் மனைவி. துளசிதாசர் எழுதிய ராமாயணத்தில் சீதைக்கு ராமன் அண்ணன். இதை வாலியை சாட்சியாக வைத்து சொல்கிறேன். காரியத்தில் தவறிருந்தால், சுட்டிக் காட்டும் திறமை வீரமணிக்கு உண்டு. இதுதான் சரியான ராமாயணம் என்று வாதாடும் உரிமை வாலிக்கு உண்டு. நாம் படித்து அறியாத பழைய புராணங்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம். விஞ்ஞான உலகில் தவறுகளை செய்துவிட்டு தப்பிக்க முடியாது. ஏனென்றால், நாளை இளைஞர்கள் கேள்வி கேட்பார்கள். அதற்கு பதில் சொல்லியாக வேண்டும். நான் இளமையில் ஆதிக்க இந்தி மொழியை எதிர்த்து போராடினேன். அப்போது தமிழை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு இளைஞர்களுக்கு இருந்தது. ஆனால், இன்றைக்கு தமிழ் மொழியை காக்க வேண்டும் என்ற உணர்வு இளைஞர்கள் மத்தியில் மங்கிவிட்டது.இவ்வாறு கருணாநிதி பேசினார்.வாலி பேசுகையில், ""எனது உயிரை காப்பாற்றியவர் கருணாநிதி. அவரை பற்றி நான் பாடாவிட்டால், என் நாக்கு இருப்பதில் அர்த்தமில்லை. என் பேச்சும், மூச்சும் இருக்கும் வரை அவரை போற்றிப் பாட வேண்டும். வீரமணி, நல்லக்கண்ணு, பாரதிராஜா ஆகியோர் சொன்னது போல கருணாநிதி மிக உயர்ந்த மனிதர். மனிதநேயம் கடைப்பிடிப்பவர். தனது இளமைப் பருவம் முதல் கொள்கைக்காக வாழ்ந்து வருபவர். எனக்கு இருக்கும் எல்லா புகழும் கருணாநிதிக்கே உரியது,'' என்றார்.
5 comments:
கலைஞர் வாலியை சாட்சியாக வைத்து ஆதாரதோடு பேசி இருக்கிறார்.அதற்கு பதில் தர துப்பில்லாமல் இந்த வீணாப்போன பதிவு எதற்கு
வாலி உடல்நிலைசரியில்லாதபோது கலைஞர் உதவினார். அந்த நன்றிகடனுக்காக கலைஞர் என்ன சொன்னாலும் வாலி தலையாட்டுவார்.
அதற்காக கலைஞர் புளுகுகிறார் என்பது இல்லை என்று ஆகிவிடுமா?
இதோ துளசிதாஸரின் ராமசரிதமானஸ்
இதில் எங்கே ராமனின் சகோதரி சீதை என்று இருக்கிறது என்று காட்டமுடியுமா?
துளசிதாஸரின் ராமசரித மானஸ்
ஒரு மாநில முதல்வர் அதுவும் ஒரு பொது மேடையில் அருகில் இந்து மத புராணங்களை கரைத்து குடித்தவரை வைத்து கொண்டு தவறாக சொல்வார் என்று சொல்கிறீர்கள்.சரி,துலசிதாசரின் ராமாயணத்தை நான் நிதானமாக படித்து ஆதாரத்தை சொல்கிறேன்.இப்போது கீழே தரப்பட்டுள்ள ஆதாரத்துக்கு என்ன பதில். மேலும் ராமன் குதிரைக்கு பிறந்தான் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறதே அது உண்மையா?
Suvira Jaiswal
Historical Evolution of the Ram Legend
“Nevertheless, Sita figures both as the sister and wife of Rama in Dhasharata Jataka which is the earliest documentation of the Ram legend and retains some very primitive features. Here Ram is a Bhodhisattva, and is eldest son of Dhasharath by his first queen. Dhasharath is king of varanasi and not of Ayodhya,and has two other children from his first queen,Lakhana kumar and Sita devi. To avoid the evil machinations of their stepmother, who wishes to install her son Bharath Kumar as heir apparent in place of Ram, Dhasharath sends Ram and Lakhana to exile for twelve years and Sita accompanies her brothers. Dhasharath dies after nine years and Lakhana and Sita return to the kingdom,but Ram comes back after the completion of twelve years ..“
Centre for Historical studies,Jawaharlal Nehru University,New delhi.
Social Scientist,Vol-21, Nos-3-4, March-April-1993
ஜாதக கதைகள் என்பன புத்தர் காலத்தியவை.
மக்கள் மத்தியில் ராமருக்கு இருக்கும் மரியாதையை அழிக்கவும் ஆயிரத்தெட்டு கதைகள் பௌத்தர்களும் ஜைனர்களும் எழுதினார்கள்.
அதற்கென்ன இப்போது?
கேள்வி துளசிராமாயணத்தில் கலைஞர் ராமனின் சகோதரி சீதை என்று சொல்லியிருக்கிறார்.
ஆதாரம் காட்டுங்களேன்.
அந்த புத்தகத்தில் அப்படி இருக்கிறது
புலவர் குழந்தை எழுதிய புத்தகத்தில் இபப்டி இருக்கிறது என்றெல்லாம் இங்கே எடுத்துக்க்கொண்டு வர வேண்டாம்.
சொல்லுங்கள் அனானி,
எங்கே துளசி ராமாயணத்தில் ராமரின் சகோதரி சீதை என்று எழுதியிருக்கிறது?
Post a Comment