Tuesday, October 30, 2007

சிறுமியுடன் விருப்பத்துடன் உறவு கொண்டாலும் அது கற்பழிப்பே. - தீர்ப்பு

இக்பால் என்பவர் ஒரு சிறுமியுடன் அவரது அனுமதியுடன் உறவு கொண்டார். அந்த உடலுறவு அந்த சிறுமியின் விருப்பத்துடன் நட்ந்திருந்தாலும் அது கற்பழிப்பே என்று நீதிபதிகள் தீர்ப்பு கூறினர்.

சரியான தீர்ப்பு.

"மைனர் பெண்ணின் விருப்பத்துடன் உடலுறவு கொண்டாலும் கற்பழிப்பே'
நன்றி தினமலர்

புதுடில்லி : மைனர் பெண்ணுடன், அந்த பெண்ணின் விருப்பத்துடன் உடலுறவு கொண்டாலும் அது கற்பழிப்பாகவே கருதப்படும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த இக்பால் என்பவர், மைனர் பெண் ஒருவரை அவரது விருப்பத்துடன், கோவைக்கு அழைத்துச் சென்று விட்டார். அந்த பெண்ணுடன், அவரது விருப்பத்தை பெற்று உடலுறவும் வைத்து கொண்டார். இந்த வழக்கை விசாரித்த செஷன்ஸ் கோர்ட், மைனர் பெண்ணை கற்பழித்த குற்றத்துக்காக அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இத்துடன் மைனர் பெண்ணை வேறு இடத்துக்கு அழைத்துச் சென்ற குற்றத்துக்காக இந்திய தண்டனை சட்டத்தின் 366 ஏ பிரிவின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையையும் பிறப்பித்தது. இந்த தண்டனையை கேரள ஐகோர்ட்டும் உறுதி செய்தது."மைனர் பெண்ணை வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று மற்றொரு நபருடன் உடலுறவு வைத்து கொள்ள வலுக்கட்டாயப் படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்க வேண்டும், அபராதமும் விதிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.இந்த சிறை தண்டனையை எதிர்த்து இக்பால், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் அர்ஜித் பசாயத் மற்றும் பி.சாந்தசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை செய்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:இந்த வழக்கில் தொடர்புடைய 14 வயதுக்கு உட்பட்ட மைனர் பெண் குற்றம் சாட்டப்பட்டவருடன் விருப்பத்தின் பேரிலேயே சென்றுள் ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவரை தவிர வேறு ஒருவருடன் உடலுறவு வைத்து கொள்ள அந்த பெண் வலுக்கட்டாயப்படுத்தப்படவில்லை. எனவே, 366 ஏ பிரிவின் கீழ் தண் டனை அளிக்க வழியில்லை. அதே நேரத்தில் மைனர் பெண்ணுடன், அந்த பெண்ணின் விருப்பத்துடன் உடலுறவு கொண்டாலும், அது கற்பழிப்பாகவே கருதப்படும். எனவே, இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவின் கீழ் தண்டனை அளித்து இருப்பது சரியான உத்தரவே.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

2 comments:

Anonymous said...

இரைதூதரின் அழகான உதாரணத்தை இக்பால் பின்பற்றியிருக்கிறார்.

இதில் தவறு என்ன?

Anonymous said...

அதானே?