Wednesday, October 17, 2007

மாதா அமிர்தானந்தமயிக்கு பாரீஸ் திரைப்பட விழாவில் விருது

மாதா அமிர்தானந்தமயிக்கு பாரீஸ் திரைப்பட விழாவில் விருது
பாரீஸ்: உலக நன்மைக்காக பெரும் பங்காற்றியதற்காக, பாரீசில் நடந்த மனித உரிமை திரைப்பட விழாவில் மாதா அமிர்தானந்தமயிக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. `அன்பையும், அமைதியையும் உலகத்துக்கு கொண்டு வந்த தேவதை மாதா அமிர்தானந்தமயி' என்று விருதை வழங்கிய பிரபல ஹாலிவுட் நடிகை ஷரோன் ஸ்டோன் குறிப்பிட்டார். 1997ல் நோபல் பரிசு பெற்ற ஜோடி வில்லியம்ஸ், பிரான்சின் மனித உரிமை அமைச்சர் ரமா யாதே ஆகியோரும் விருது வழங்கி பேசினர். மாதா அமிர்தானந்தமயியின் வாழ்க்கையை விளக்கி, பிரெஞ்சு இயக்குனர் ஜான் கோனன் உருவாக்கிய `தர்சன்' என்ற திரைப்படமும் விழாவில் திரையிடப்பட்டது.

No comments: