சமையல் செய்யும் பெண்ணுடன் தொடர்பு : மதபோதகர் மீது திருச்சபை குற்றச்சாட்டு
கிருஷ்ணகிரி: சமையல் செய்யும் பெண்ணுடன் பாலியல் தொடர்பு வைத்துள்ளதாக கிருஷ்ணகிரி மதபோதகர் மீது திருச்சபை நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிருஷ்ணகிரி பெங்களுரூ ரோடு கலெக்டர் பங்களா அருகே ஐ.இ.எல்.சி., நுõற்றாண்டு திருச்சபை உள்ளது. அதில், கிருஷ்ணகிரியை சேர்ந்த 172 குடும்பத்தினர் உறுப்பினராக உள்ளனர். இந்த சர்ச் வளாகத்தில் உள்ள இல்லத்தில் ஊனமுற்ற குழந்தைகள் 50 பேர் தங்கி படிக்கின்றனர். திருச்சபை நிர்வாகத்தை மதபோதகர் கவனித்து வருகிறார்.
வேலுõர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த அலெக்சாண்டர், 1991 முதல் இச்திருச்சபையில் மதபோதகராக இருந்து வருகிறார். அவருக்கு திருச்சபை சார்பில் மாத சம்பளமாக ரூ.11 ஆயிரத்து 500 வழங்கப்படுகிறது. திருச்சபையில் நடக்கும் வாராந்திர ஜெப கூட்டங்களுக்கு மதபோதகர் தலைமை வகிக்க வேண்டும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை சபை உறுப்பினர்களது குடும்பங்களை சந்திக்க வேண்டும். இந்த நிலையில், சர்ச் வளாகத்தில் உள்ள ஊனமுற்றோர் இல்லத்தில் சமையல் வேலை செய்து வரும் பெண்ணிடம் மதபோதகர் அலெக்சாண்டர் பாலியல் தொடர்பு வைத்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டை திருச்சபை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திருச்சபை தலைவர் தங்கராஜ், செயலாளர் ஏசையன், பொருளாளர் சாமுவேல் சாலமன் ஆகியோர் கூறியதாவது: பணியில் சேர்ந்ததில் இருந்தே மதபோதகர் அலெக்சாண்டர் சபை மக்கள் விரும்பும் வகையில் பணியாற்றவில்லை. சர்ச் வளாகத்தில் உள்ள ஊனமுற்றோர் இல்லத்தை தன் வசமாக்கி விட்டார். ஊனமுற்ற குழந்தைகளுக்கு கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை எடுத்துக் கொள்கிறார். பூட்ஸ் காலால் ஊனமுற்ற சிறு குழந்தைகளை உதைத்து சித்ரவதை செய்து வருகிறார். அவரிடம் நடந்த சம்பவம் குறித்து கேள்வி கேட்டால், அவருக்கு ஆதரவாக உள்ள உறுப்பினர்களை வைத்து பதில் கொடுக்கிறார். எதிர்த்து கேட்பவர்களை சபையை விட்டும் வெளியேற்றுகிறார். மூன்று மணி நேரம் மதபோதகர் இல்லத்தையும், சமையல் அறையையும் பூட்டி வைத்து, சமையல் செய்யும் சாந்தி என்ற பெண்ணுடன் தனியாக இருக்கிறார். இந்த மாதிரி சம்பவம் ஊனமுற்ற காப்பாளர் மற்றும் துணை காப்பாளருக்கு தெரிந்தே நடக்கிறது. இந்த தகவல் தெரிந்ததும் சபை உறுப்பினர்கள், இளைஞர்கள், பெண்கள் கோபமடைந்துள்ளனர். 80 குடும்பத்தினர் கையெழுத்திட்டு, எங்களிடம் புகார் அளித்துள்ளனர். திருச்சபை நிர்வாகிகள் புகாரின் மீது விசாரணை நடத்தி, மதபோதகரின் அழைப்பை திரும்ப பெற்றுக்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். புகார் குறித்து விவாதிக்க இன்று (20ம் தேதி) சபை கூட்ட அழைப்பு சுற்றறிக்கை, நிர்வாகிகளால் தயாரிக்கப்பட்டு மதபோதகரின் கையெழுத்தை கேட்டோம். அவர் கையெழுத்து போட மறுத்ததால், கூட்டம் நடக்கவில்லை. முறைகேடு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மதபோதகர் சபையை விட்டு வெளியேறாவிட்டால், நாங்கள் சர்ச் முன் தீக்குளிக்கவும் தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மதபோதகர் அலெக்சாண்டர் கூறுகையில்,"கருத்து வேறுபாடு உள்ள சில சபை உறுப்பினர்கள், அவதுõறான செய்தியை பரப்பி வருகின்றனர். அவை அனைத்தும் உண்மையற்றவை. எனது உடல் நிலை சரியில்லாததால், திருச்சபை செயலரிடம் விடுப்பு மனுவை அளித்துள்ளேன். உடல்நிலை சரியானவுடன் திருச்சபை கூட்டத்தை கூட்டி அனைத்து குற்றச்சாட்டுகளையும் விவாதிப்பேன்' என்றார்.
நன்றி தினமலர்
No comments:
Post a Comment