Thursday, October 18, 2007

வறுமை ஒழிப்பு காங்கிரஸ் ஸ்டைல்- கையெழுத்து பிரச்சாரம்

இந்திரா காந்தி "கரிபி ஹடாவ்" என்று கோஷம் போட்டே வறுமையை ஒழித்த மாதிரியில் புதுச்சேரி காங்கிரஸ் அரசு, வறுமையை ஒழிக்க கையெழுத்து பிரச்சாரம் நடத்துகிறது...


நன்றி தினமலர்

--

வறுமை ஒழிப்பு கையெழுத்து பிரசாரம்* முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்

புதுச்சேரி: பல்நோக்கு சமூக சேவை சங்கம் சார்பில் நடந்த வறுமை ஒழிப்பு குறித்த கையெழுத்துப் பிரசாரத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

பல்நோக்கு சமூக சேவை சங்கம் டில்லியைச் சேர்ந்த வாதொனோ தோடோ என்ற நிறுவனத்துடன் இணைந்து கடற்கரையில் மாபெரும் கையெழுத்துப் பிரசாரத்தை நேற்று நடத்தியது. இந்நிகழ்ச்சிக்கு சங்க நிர்வாக இயக்குனர் ரட்சகர் அடிகளார் முன்னிலை வகித்தார். முதல்வர் ரங்கசாமி முதல் கையெழுத்திட்டு பிரசாரத்தைத் துவக்கி வைத்தார். இப்பிரசாரம் இன்று மாலை வரை நடக்கிறது. வறுமையை மனித உரிமை பிரச்னையாக கருத வேண்டும். அரசாங்கத்தின் செயல் திட்டத்தில் இதை மையப்படுத்த வேண்டும் என்று பிரசாரத்தில் வலியுறுத்தப்பட்டது. முதல்வரின் பாராளுமன்றச் செயலர் நமச்சிவாயம் மற்றும் பள்ளிக் குழந்தைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பொது மக்கள் வறுமை ஒழிப்பு குறித்த தங்களுடைய கருத்துக்களை கவிதையாகவோ, ஓவியமாகவோ மற்றும் கையெழுத்திட்டோ தெரிவிக்கலாம். விழாவிற்கான ஏற்பாடுகளை பலநோக்கு சேவா சங்க பணியாளர்கள் செய்திருந்தனர்.

1 comment:

Anonymous said...

Congress are the ones who would be sad if "India shines"