Wednesday, October 24, 2007

மதுரையில் அம்‌பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை-பெரும் பதற்றம், பஸ்கள் உடைப்பு

என் கடும் கண்டணத்தை பதிவு செய்கிறேன். பெருந்தலைவர் அம்பேத்கார் உருவச்சிலையை அவமரியாதை செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டியவர்கள்.

இந்த அவமரியாதையை எந்த இந்துக்களும் செய்திருக்கமாட்டார்கள் என்ற் உறுதியாக நம்புகிறேன்.


0-0
மதுரையில் அம்‌பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை-பெரும் பதற்றம், பஸ்கள் உடைப்பு
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 23, 2007


மதுரை: மதுரை அவனியாபுரத்தில் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இப் பகுதியில் உள்ள மாநகராட்சி காலனியில் அம்பேத்கர் சிலை உள்ளது. இன்று காலை யாரோ விஷமிகள் இந்த சிலைக்கு செருப்பு மாலையை அணிவித்துள்ளனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த அப் பகுதி மக்கள் பஸ்கள் மீது கல் வீச்சில் இறங்கினர். தவறு செய்தவர்களை கைது செய்யக் கோரி மறியலிலும் ஈடுபட்டனர்.

மூன்று அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. ஒரு பள்ளி வேன் மற்றும் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஆட்டோ ரிக்ஷா ஆகியவற்றையும் அடித்து நொறுக்கினர்.

பள்ளி வேன் மீதும் கல் வீச்சு நடந்தில் மாணவர்கள் சிலர் காயமடைந்தனர்.

இதையடுத்து எஸ்பி அன்பு தலைமையில் போலீசார் விரைந்து வந்து அப் பகுதியில் அமைதியை நிலைநாட்டினர்.

கல்வீச்சில் ஈடுபட்ட 120 பேரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் கலவரம் ஏற்படாமலிருக்க அவனியாபுரம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேவர் ஜெயந்தி நெருங்கி வரும் வேளையில், அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்ட சம்பவம் போலீசாருக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியுள்ளது.

1 comment:

Mangai said...

I condemn the act. At the same time I also
condemn the violent reactions. Ambedkar wanted people to study and come up in life. If people continue to react violently his very very basic purpose gets defeated.