Friday, October 26, 2007

ஆர் எஸ் எஸ் ஊழியர் பாஷா அன்சாரி ஆகியோர் உட்பட 43 பேருக்கு ஆயுள்

ஆர் எஸ் எஸ் தலைவர்கள் பாஷா அன்சாரி ஆகியோர் உட்பட 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏதோ பிரச்னையிலிருந்து திசை திருப்ப ஆர் எஸ் எஸ் ஊழியர்களான இவர்கள் கோவையில் குண்டு வைத்தார்கள். கூடவே ஏராளமான முஸ்லீம் ஆர் எஸ் எஸ் ஊழியர்களும் இந்த குண்டு வழக்கில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்து தற்போது ஆயுள் தண்டனை பெற்றுள்ளார்கள்.

(இப்படி எழுதினாத்தான் நம்மளை அறிவுஜிவின்னு சொல்லி கைதட்டுவாங்களாமே?)

நன்றி தினமலர்

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை அறிவிப்பு முடிந்தது : 158 குற்றவாளிகளில் 43 பேருக்கு ஆயுள்


கோவை : கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட அனைவருக்கும் தண்டனை அறிவிப்பு முடிந்து விட்டது. 158 குற்றவாளிகளில் 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி நடந்த தொடர் குண்டு‌வெடிப்பில் 58 பேர் பலியானார்கள். 200க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்கள். இந்த பயங்கர தாக்குதல் குறித்த வழக்கு கோவை மத்திய சிறை வளாகத்தில் இயங்கி வரும் தனிக்கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் மொத்தம் 158 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு இருந்தது. அவர்களுக்கு கடந்த ஒன்றரை மாத‌ங்களாக பல்வேறு கட்டங்களாக தண்டனைகள் அறிவிக்கப்பட்டு வந்தது. தனிக்கோர்ட் நீதிபதி உத்ரபதி தண்டனைகளை அறிவித்து வந்தார். நேற்று வரை 153 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தது.

மீதமுள்ள 5 பேர் மற்றும் அப்ரூவருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி உஜிபுல் ரகுமான், முகமது அலி, முஜிபூர் ரகுமான் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், பக்ருதின் அலி அகமது, சாகுல் அமீது ஆகியோருக்கு தலா 13 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட அல்-உம்மா நிறுவனர் பாஷா, பொதுச்செயலாளர் அன்சாரி உள்பட 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஷாவின் குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு இந்த வழக்கில் தண்டனை கிடைத்துள்ளது.

இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய வெடிமருந்து வியாபாரி ரியாசுல் ரகுமான் வழக்கில் இருந்து முற்றிலும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி உத்ரபதி அறிவித்தார். இவரோடு சேர்ந்து இவ்வழக்கில் மொத்தம் 88 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மதானி உள்ளிட்ட 8 பேர் நிரபராதிகள் என அறிவிக்கப்படனர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் தண்டனை காலத்தை ஏற்கனவே சிறையில் கழித்து விட்டதால் விடுவிக்கப்பட்டு விட்டனர்.

அனைவருக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வரும் திங்கட்கிழமை அனைவருக்கும் தீர்ப்பு நகல் வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

1 comment:

Anonymous said...

அந்த பேத்தல் பதிவில் நான் பதிலெழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

பதிவு எழுதியதற்கு நன்றி