மத உணர்வை புண்படுத்தும் நடிகர் விஜய் வழக்கு ஒத்தி வைப்பு
மதுரை: மத உணர்வை புண்படுத்தும் போஸ்டர்களை ஒட்டியதாக நடிகர் விஜய் மீதான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மதுரை நாராயணபுரத்தை சேர்ந்த தமிழ் தாங்கி சங்க பொது செயலாளர் திரவியபாண்டியன். இவர் நடிகர் விஜய், போலீஸ் கமிஷனருக்கு எதிராக கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகர் விஜய் நடித்த `போக்கிரி' சினிமாவிற்காக அவரது ரசிகர்கள் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், பேனர்களை வைத்தனர். இதில் விஜய்யை விஷ்ணுவதாக சித்தரித்து அவரது முகத்தை மட்டும் சிறிது மாற்றங்கள் செய்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. மதுரையில் முக்கிய தியேட்டர்கள் அருகிலும், பொது சுவர்களிலும் அனுமதியின்றி இவை ஒட்டப்பட்டன. இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. போஸ்டர்களை ஒட்டியவர்களை கேட்ட போது, எங்களை மிரட்டினர். சினிமா நீண்ட நாட்கள் தியேட்டரில் ஓட வேண்டும் என்பதற்காக விஜய் துாண்டுதலின் படி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மனு மீது விசாரித்து விஜய் மற்றும் போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. திரவிய பாண்டியன் ஆஜரானார். மனுதாரர் தரப்பு சாட்சிகளை விசாரிக்க வேண்டி வழக்கை நவம்பர் இரண்டாம் தேதிக்கு மாஜிஸ்திரேட் சந்திரசேகரன் ஒத்தி வைத்தார்.
No comments:
Post a Comment