


பஞ்சாப் தியேட்டரில் குண்டுவெடிப்பு : 7 பேர் பலி;40 பேர் படுகாயம்
சண்டிகார்: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு தியேட்டரில் இரவு குண்டு வெடித்ததில் ஏழு பேர் பலியாயினர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர். பஞ்சாப், லூதியானாவில் சிருங்கார் என்ற தியேட்டர் உள்ளது. நேற்று மாலை இந்த தியேட்டரில் நடிகர் அக்சய் குமார் நடித்த பூல் புலாயா என்ற இந்தி படம் ஓடிக்கொண்டிருந்தது. ரம்ஜான் விடுமுறை தினமானதால் இப்படத்தைக் காண ஏராளமானோர் வந்திருந்தனர். இரவு 8.40 மணிக்கு தியேட்டரில் பயங்கர சத்தத்துடன் திடீரென குண்டு வெடித்தது. இதில், ஆறு பேர் பலியாயினர். 15 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அங்கு உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவில்லை என்று லூதியானா டி.ஐ.ஜி.,ஈஸ்வர் சிங் நிருபர்களிடம் கூறினார். சம்பவ இடத்துக்கு மாவட்ட மூத்த போலீஸ் எஸ்.பி.,மற்றும் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.இதனிடையே, குண்டுவெடிப்பு சம்பவம் குறித்த தகவல்களை தருமாறு பஞ்சாப் மாநில அரசிடம் மத்திய அரசு கேட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் மத்திய உள்துறை அதிகாரிகள் மாநில அரசின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு குண்டுவெடிப்பு தொடர்பான முழு தகவல்களை கேட்டுள்ளனர். மத்திய உள்துறை செயலர் பஞ்சாப் மாநில தலைமை செயலரை தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டார். பின்னர் அவர் இது பற்றி மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் விளக்கி கூறினார்.
No comments:
Post a Comment