ஈராக் குண்டு வெடிப்பு: ஷியா பிரிவு உயர் அதிகாரி உட்பட 30 பேர் பலி
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே நடந்த குண்டு வெடிப்பில் ஷியா பிரிவு உயர் அதிகாரி உட்பட 30க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈராக்கின் தெற்கு பாக்தாத் அருகே ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் பகுதியின் சாலையில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் ஷியா பிரிவு உயர் அதிகாரி அப்பாஸ் ஹசன் ஹம்சா கொல்லப்பட்டார். இவரது பாதுகாவலர் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதே போன்று டால்அபார் நகரில் நடந்த மற்றொரு குண்டு வெடிப்பில் 30க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
No comments:
Post a Comment