நந்திகிராமில் மீண்டும் கலவரம்
நந்திகிராம்: நந்திகிராமில் திரிணமுல் காங்., அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இந்த கலவரத்தில் மூன்று பேர் பலியாயினர். நந்திகிராமில் திரிணமுல் காங்., அமைப்பான பி.யு.பி.சி.,யை சேர்ந்தவர்களுக்கும், மா.கம்யூ., ஆதரவாளர்களுக்கும் இடையே கிழக்கு மித்னாபூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து கலகச்சியா என்ற இடத்தில் மா.கம்யூ.,வைச் சேர்ந்த ஒருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து மா.கம்யூ., நாளை 12 மணி நேர `பந்த்'க்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment