Friday, October 05, 2007

ராமர் பற்றி விமர்சனம்: கருணாநிதிக்கு ஆந்திர கோர்ட்டு சம்மன்: 1-ந்தேதி ஆஜராக உத்தரவு

ராமர் பற்றி விமர்சனம்: கருணாநிதிக்கு ஆந்திர கோர்ட்டு சம்மன்: 1-ந்தேதி ஆஜராக உத்தரவு

நகரி, அக். 5-

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆதோனியைச் சேர்ந்தவர் வால்மீகி மல்லிகார் ஜ×னா. வக்கீல். இவர் கடந்த 24-ந்தேதி ஆதோனி கோர்ட் டில் முதல்-அமைச்சர் கருணா நிதி மீது அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் "கருணாநிதி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, "ராமர் என்ன என்ஜினீயராப அவர் எந்த கல்லூரியில் படித் தார் என்றும் ராமர் மது அருந்தும் பழக்கமுடைய வர்'' என்றெல்லாம் அவதூ றாக பேசினார். இது நாடு முழுவதிலும் உள்ள இந்துக் களின் மனதை புண்படுத்தி விட்டது. இதனால் அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல் வால்மீகி மல்லி கார்ஜ×னா, "பத்திரிகைகளில் வெளியான கருணாநிதியின் ராமர் பற்றிய விமர்சனங்களை கோர்ட்டில் சமர்ப்பித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி கிரண்குமார், "கருணாநிதி மீது 298, 153ஏ, 505 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். பின்னர் அடுத்த மாதம் 1-ந் தேதி கோர்ட்டில் ஆஜராகும் படி கருணாநிதிக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவு பிறப்பித்தார்.

maalaimalar

No comments: