சேலம் :கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மாப்பிள்ளைக்கும், முஸ்லிம் மதத்தை சேர்ந்த மணப்பெண்ணுக்கும், இந்து முறைப்படி சேலம் கோவிலில் திருமணம் நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திட்டுவிளையை சேர்ந்த மைக்கேல் மகன் பஸ்டீன் (27), எம்.பி.ஏ., மாணவர். அதே பகுதியை சேர்ந்த ஜாபர் அலி மகள் ஷெரீன்பானு (21). அழகப்பா பல்கலை பி.லிட்., மாணவி. இவர்கள் நான்கு ஆண்டுகளாக தீவிரமாக காதலித்தனர். இதற்கு பெரும் எதிர்ப்பு இருந்தது.வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், சேலம் வந்தனர். நண்பர்களின் துணையுடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் திருமணத்தை பதிவு செய்து கொள்ள மத மாற்ற சான்றிதழ், வயது நிரூபண சான்றிதழ் தேவைப்பட்டது. காதலர்களிடம் சான்றிதழ் எதுவும் இல்லை.
காதலர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் திருமணம் நடத்த அனுமதி கோரப்பட்டது. போதிய சான்றிதழ் இல்லாததால், கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. அதையடுத்து கனக ருத்ர மகாகணபதி கோவிலில் காதலர்களுக்கு இந்து முறைப்படி திருமணம் நடந்தது. இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் பாதுகாப்பு கோரி, சேலம் மகளிர் போலீசில் தஞ்சம் புகுந்தனர்.
நன்றி தினமல்ர்
3 comments:
சுதந்திரம் எங்கே இருக்கிறது என்று தெரிந்திருக்கிறது தம்பதியினருக்கு
வாழ்த்துக்கள்
முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் இந்துக்களாக ஆவதுதான் தமிழ்நாட்டின் நல்ல எதிர்காலத்துக்கு ஒரே நம்பிக்கை
அனானி
கருத்துக்கு நன்றி
Post a Comment