Monday, April 14, 2008

தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய தலைவர்கள் பட்டியல்

ஜெயலலிதா, சரத்குமார், ராம.கோபாலன், இல கணேசன்

தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய தலைவர்கள் பட்டியல்
ஜெயலலிதா:
சித்திரைத் திருநாளை விமரிசையாகக் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் சுடர்விட்டு பிரகாசிக்கவும், ஏழை எளிய மக்கள் இன்புற வாழவும், தம் மக்களின் நலனுக்காக தமிழக மக்களின் நலன்களை தாரை வார்க்கும் சுயநலவாதிகளும், துரோகிகளும் கூனிக் குறுகிடவும், ஆணவமும், ஆடம்பரமும், வீண் ஆரவாரமும் அடங்கி ஒடுங்கிடவும், உண்மையான மக்களாட்சியின் உன்னதத் தன்மைகள் மீண்டும் மலர்ந்து மணம் வீசிடவும் இந்த நன்னாளில் சூளுரைப்போம்.

தமிழக மக்களை தற்போது வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிற துன்பங்களும், துயரங்களும் அறவே நீங்கி அமைதியும், ஆனந்தமும், குதூகுலமும் சரிவதாரி ஆண்டில் பூத்துக் குலுங்க வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து, அனைத்துத் தமிழர்களுக்கும் எனது உளமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உவகையுடன் உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


இல.கணேசன்:

பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உலகத்தில் முதன் முதலாக நாகரீகம் பண்பாடு தோன்றி வளர்ந்த நாடு நம் நாடு. 5,000 ஆண்டுக்கு முந்தைய புராணங்களில் கிரகங்களின் அசைவு குறித்து சொல்லப்பட்டுள்ளது. மிகிரர் வகுத்து அளித்த மிகிர சம்ஹிதா இன்றும் வானவியலுக்கு ஆதாரமாக உள்ளது.

காலக் கணக்கை வகுத்த நம் முன்னவர்கள் இந்த சித்திரை மாதத்தை ஒட்டிய காலம் ஆண்டு துவங்குவதாக கணித்தார்கள்.

அரசின் கொள்கை காரணமாக ஆண்டின் துவக்கத்தை மாற்றியமைக்காக ஆலய நடைமுறைகளில் குறிக்கிடுவது அத்துமீறிய செயல். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.


சரத் குமார்:
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இதுநாள் வரை தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வந்த சித்திரைத் திருநாள் என்பது தமிழ் மக்களின் பாரம்பரியத்தோடு இணைந்துவிட்ட திருநாளாகும்.

வேளாண்மை கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழர் வாழ்வில், வருகிற ஆண்டுக்குத் தேவையான முன் ஏற்பாடுகளில் புதுக்கணக்கு துவங்குவது, விளை நிலத்தை அபிவிருத்தி செய்வது போன்ற புதிய முயற்சிகள் தொடங்குவது இந்த சித்திரைத் திருநாளையொட்டிய சிறப்புக்களாகும்.

தமிழர் நலனைப் பேணிக் காப்பதில் முன்னிலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை அண்மைக் கால நிகழ்ச்சிகள் நமக்கு உணர்த்துகின்றன. எனவே ஓகேனக்கல் பிரச்சினையில் தமிழ் உலகம் காட்டிய ஒற்றுமை உணர்வு வளமான தமிழகத்தை உருவாக்குவதிலும் மேலோங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.


-

மற்றவர்கள் சித்திரை திருநாள்(???) வாழ்த்து கூறியுள்ளனர். கேரளாவில் சித்திரை திருநாள் என்று ஒரு அரசர் இருந்தார். அவருக்கு வாழ்த்து கூறினார்களோ என்னவோ?

1 comment:

Anonymous said...

இவர்களைத்தவிற மற்றவர்கள் திராவிடம் என்னும் 19ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு semitic மத ஆதிக்கத்தால் திம்மிகளாகி உள்ளனர்.

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடும் மானமுள்ள தமிழன்.