Tuesday, April 15, 2008

தமிழக முதல்வர் கலைஞர் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட தமிழருக்கு 2 லட்ச ரூபாய் அளித்தார்

ஆப்கான்-பலியான கோவிந்தராஜ் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம்-கருணாநிதி அறிவிப்பு
திங்கள்கிழமை, ஏப்ரல் 14, 2008


சென்னை: ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் பலியான கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கோவிந்தசாமியின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இரு தினங்களுக்கு முன் ஆப்கானி்ன் நிம்ரோஸ் மாகாணத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தின் எல்லைப் புற சாலைகள் அமைப்பினர் மீது தலிபான் தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர்.

இதி்ல் கிருஷ்ணிரி மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மற்றும் எம்.பி.சிங் ஆகிய இருவரும் பலியாயினர். இதில் சிங் பொறியாளர் ஆவார். கோவிந்தசாமி தொழிலாளி ஆவார். (இவரும் பொறியாளர் என்று செய்திகள் வந்தன. அது தவறு).

பிஷ்ராம் ஓரான், விக்ரம் சிங், முகம்மது நஜீன் கான், அனில் குமார் தம்பி, மாயாராம் ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் ஆப்கானியர்கள் இருவரும் காயமடைந்தனர்.

உயிரிழந்த கோவிந்தசாமியின் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளது. இவர் மாதாமாதம் அனுப்பி வந்த ரூ. 7,000த்தில் தான் அந்தக் குடும்பமே வாழ்ந்து வந்தது.

இந் நிலையில் அவரது மறைவு இக் குடும்பத்தை நிலை குலைய வைத்துள்ளது. இதையடுத்து கோவிந்தசாமியின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் கருணாநிதி, அவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டில் புணரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவத்தில் பணியாற்றிய கோவிந்தசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் கே.திப்பனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்.

கோவிந்தசாமி தீவிரவாதிகளால் பயன்படுத்தப்பட்ட மனித வெடிகுண்டு மூலமாக கொல்லப்பட்டார். இந்த செய்தியை அறிந்த முதல்வர் கருணாநிதி மிகுந்த வேதனையும், துயரம் அடைந்ததுடன் கோவிந்தசாமியை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிக்கும் வகையில் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

உடல் வருவதில் தாமதம்:

இதற்கிடையே, கோவிந்தசாமி மற்றும் எம்.பி.சிங்கின் உடல்களை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருவரின் உடல்களும் இன்னும் பிரேதப் பரிசோதனை நடத்தப்படவில்லை. விசாரணையை முடுக்கி விட்டுள்ள ஆப்கான் நிர்வாகம், அதன் பின்னரே பிரேதப் பரிசோதனையை நடத்தும் எனத் தெரிகிறது.

எனவே இன்னும் 2 நாட்களுக்குப் பின்னரே இரு இந்தியர்களின் உடல்களும் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.

கலெக்டர் ஆறுதல்:

இந் நிலையில் கோவிந்தசாமியின் வீட்டுக்குச் சென்ற கிருஷ்ணகிரி கலெக்டர் சந்தோஷ் பாபு அவரது குடும்பத்துக்கு அரசின் சார்பில் நேரில் இரங்கலும் ஆறுதலும் தெரிவித்தார்.

No comments: