ரஷ்யாவில் மீண்டும் துளிர்விடுகிறது யோகா
மாஸ்கோ(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஏப்ரல் 2008 ( 12:33 IST )
இந்தியாவின் தொன்மைவாய்ந்த பல்வேறு கலைகளில் ஒன்றான யோகா கலை, ரஷ்யாவில் மீண்டும் துளிர் விட துவங்கியுள்ளது.
சோவியத் ஒன்றியத்தின் தலைவராக இருந்த பிரஸ்னேவ் ஆட்சியில் ரஷ்யாவில் யோகக் கலையை பயில தடை விதிக்கப்பட்டிருந்தது.அது மத ரீதியான நம்பிக்கை சார்ந்தது என்று கம்யூனிச சிந்தாந்திகள் முடிவு செய்ததால் இந்த இந்தியக் கலையை பயில அங்குள்ள மக்களுக்கு ஆவலிருந்தும் அரசு இதற்கு தடை விதித்தது.
இந்நிலையில் , ரஷ்யாவின் புதிய அதிபராக அடுத்த மாதம் பதவியேற்கவுள்ள அதிபர் திமித்ரி மெட்விடேவின் மனைவி ஸ்வெட்லானாவுக்கு யோகா மீது தனி ஈடுபாடு உண்டு.இந்நிலையில், அவரது அறிவுரையின்பேரில் திமித்ரியும் யோகாக் கலையை பயின்று வருகிறர்ர்.
தற்போது மெட்விடேவ் சிரசாசனத்தை முழு மூச்சுடன் செய்து வருகிறார்.இதன் மூலம் இந்தியாவின் மரபுக் கலைகளில் ஒன்றான யோகா, விரைவிலேயே ரஷ்யா முழுவதும் வேகமாக பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(மூலம் - வெப்துனியா)
No comments:
Post a Comment