Tuesday, April 15, 2008

தமிழறிந்த கலைஞர் கருணாநிதி இப்படி பேசலாமா?

--

சென்னையில் 'டைம்ஸ் ஆப் இந்தியா'-கருணாநிதி தொடங்கி வைத்தார்
திங்கள்கிழமை, ஏப்ரல் 14, 2008

சென்னை: இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆப் இந்தியா சென்னையில் காலடி எடுத்து வைத்துள்ளது. இதன் சென்னை பதிப்பை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

சென்னைப் பதிப்பை தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசுகையில், 1838ம் ஆண்டு தொடங்கப்பட்டது டைம்ஸ் ஆப் இந்தியா. நாட்டின் மிகப் பழமையான நாளிதழ்.

டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்திலிருந்து எக்கனாமிக் டைம்ஸ், நவபாரத் டைம்ஸ், பெமினா, பிலிம்பேர் ஆகியவையும் வெளியாவது மகிழ்ச்சி தருகிறது. இதுதவிர டிவி, ரேடியோவிலும் டைம்ஸ் ஆப் இந்தியா முத்திரை பதித்துள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா என்ற பெயர் என்னை மிகவும் கவர்ந்தது. அதேபோல சென்னைப் பதிப்பு நாளிதழும் என்னைக் கவரும் என்று நம்புகிறேன்.

மக்கள் மனதில் படிந்து கிடக்கும் அறியாமை என்ற இருளை நீக்கி, அறிவுச் சுடரேற்றும் பணியை டைம்ஸ் ஆப் இந்தியா செய்யும் என்று நம்புகிறேன் என்றார்.

நிகழ்ச்சியில், மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

டைம்ஸ் ஆப் இந்தியாவின் வரவு மூலம் தமிழகத்தின் முன்னணி நாளிதழான இந்துவுக்கும், இரண்டாவது நிலையில் உள்ள டெக்கன் கிரானிக்குளுக்கும் கடும் போட்டி உருவாகியுள்ளது.

--

ஐம்பதாண்டு திராவிட ஆட்சியில் மக்கள் அறியாமையில் முழுகிக்கிடக்கிறார்கள் என்று சொல்வது போல இருக்கிறது.

இது என்ன சொந்த செலவில் சூனியமா? தமிழறிந்த கலைஞர் இப்படி பேசலாமா?

No comments: