Monday, April 21, 2008

தரித்திரம் புடிச்சவனை விடு,இப்ப என் மீது எண்ணெயை ஊற்று -

யாரோ ஒரு மரியாள் என்ற பெண் அதிக விலை கொண்ட எண்ணெயை கொண்டுவந்து இயேசு என்ற இந்த யூத தெய்வத்தின் மேல் கொட்டினாளாம்.

அப்போது அருகே இருந்த ஒருவர், ஏனய்யா விலைமதிப்பு கொண்ட இந்த எண்ணெயை வீணடிக்கிறீர்கள்? ஏழைகளுக்கு கொடுக்கலாமே என்று கூறினார்.

அதற்கு இயேசு என்ற யூத தெய்வம், ஏழைங்க எப்பவுமே இருப்பானுங்க. நான் எப்பவுமே உங்க கூட இருக்கமாட்டேன் (ஜீவிக்கிறார், போவிக்கிறார் என்று கத்தும் கூட்டம் கவனிக்க) அதனால இப்போது என் மீது எண்ணெயை கொட்டு என்று கேட்டு வாங்கிக்கொண்டதாம்.

3. அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.
Then took Mary a pound of ointment of spikenard, very costly, and anointed the feet of Jesus, and wiped his feet with her hair: and the house was filled with the odour of the ointment.

4. அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து:
Then saith one of his disciples, Judas Iscariot, Simon's son, which should betray him,

5. இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான்.
Why was not this ointment sold for three hundred pence, and given to the poor?

6. அவன் தரித்திரரைக் குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.
This he said, not that he cared for the poor; but because he was a thief, and had the bag, and bare what was put therein.

7. அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.
Then said Jesus, Let her alone: against the day of my burying hath she kept this.

8. தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன் என்றார்.
For the poor always ye have with you; but me ye have not always.

3 comments:

Anonymous said...

நல்லா மூக்கை உடைக்கிறீர்கள்.

Anonymous said...

இந்து கோவிலில் எண்ணெயை வீணடிக்கிறார்கள் என்று பிராயச்சித்தம் செய்யவும் ஊருக்கு விளக்கேற்றி வைக்கவும் செய்த போது கிண்டல் அடித்தார்கள்.

இந்த கார்த்தாரே ஏழைக்கெல்லாம் கொடுக்காதே, என் மீது ஊற்று என்று கேட்கிறது.

சுத்த டுபாக்கூரா இருக்கே

Anonymous said...

இது திருந்தின கர்த்தரா திருந்தாத கர்த்தாரா?