Thursday, April 17, 2008

உலகம் உருண்டையா தட்டையா? கடும் விவாதம்!



அரபியை தாய்மொழியாக கொண்டவர், குரானை ஆழ்ந்து படித்தவர், குரானின்படி, உலகம் தட்டைதான் என்று அடித்து சொல்கிறார்.

எதிர்த்து பேசுபவர் உலகம் உருண்டை என்றுதான் அறிவியல் கூறுகிறது என்று சொல்கிறார்.

அறிவியல் எல்லாம் சதி! உலகம் தட்டைதான்.. ஏனெனில் குரான் அப்படித்தான் கூறுகிறது என்று அடித்து கூறுகிறார் அரபியை தாய்மொழியாக கொண்ட முஸ்லீம்.

28 comments:

Anonymous said...

பரிணாமவியலுக்குத்தான் பிரச்னை என்று நினைத்தேன்.

உலகம் உருண்டைன்னே ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறார்களா..

சரியாப் போச்சு

Anonymous said...

உலகம் தட்டையா இருந்தா ரொம்ப நல்லது.

இவனுங்களை ஓரமா கூட்டிகிட்டு போயி தள்ளி உட்டுடலாம்
:-))

Anonymous said...

சிந்திக்க உண்மைகள் பதிவு இந்த் விவாதத்தில் எந்த பக்கம் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை

:-))))))))))))))))))

Anonymous said...

சிறுபான்மையினரின் மத உணர்வுகளை புண்படுத்தக்கூடாது என்பதற்காக இனிமேல் உலகம் தட்டை என்று பள்ளிக்கூடங்களில் சொல்லித்தரப்படுமா?

எழில் said...

அனானி நண்பர்கள் கிண்டல் செய்தாலும், இதே போக்கில் தமிழ்நாடு போனால் வெகுவிரைவில் இந்த விவாதம் இங்கேயே நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பெரும்பாலும் மதம் மாறியவர்கள்தான் மிகவும் தீவிரமாக இருப்பார்கள். ஆகவே எதிர்காலத்தில் தமிழர்கள் இதே போல பைபிளிலும் குரானிலும் உலகம் தட்டை என்றுதான் சொல்லியிருக்கிறது என்று சொல்லி பாடப்புத்தகங்களில் அப்படியே எழுதியிருந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

Anonymous said...

உலகம் தட்டை என்று குரானில் சொல்லியிருக்கிறது என்று அரபு மொழியை தாய்மொழியாக கொண்டவர் கூறுகிறார்.

இங்கே என்னடாவென்றால், குவாண்டம் பிஸிக்ஸெல்லாம் குரானில் இருக்கிறது என்று கதை விடுகிறார்கள் தமிழர்கள்.

Anonymous said...

உலகம் தட்டை அல்ல, உருண்டை என்று கூட தெரியாமல் எப்படி கடவுள் இருக்க முடியும்?

அப்படியென்றால், கடவுள்தான் முகம்மதிடம் குரானை சொன்னார் என்று முஸ்லீம்கள் சொல்வது பொய்யா? அறியாமையா?

டோண்டுவிடம்தான் கேட்கவேண்டும்.

எழில் said...

அனானி நண்பர்களே
பெயர் போட்டு எழுதலாமே?

Anonymous said...

முற்போக்கு பட்டம் போயிடும்னு எங்களுக்கு பயம் இருக்காதா?
:-))

Unknown said...

//இவனுங்களை ஓரமா கூட்டிகிட்டு போயி தள்ளி உட்டுடலாம் //

என்ன நக்கலா சிறுபான்மையின்ருக்காக உயிரை குடுக்க தமிழ் நஆட்டில் ஏராளமான தலைவர்கள் இருக்கிறார்கள்.
(பெரும்பான்மையின்ருக்காக யாரும் இல்லை)

தறுதலை said...

பகவான் ஸ்ரிராமர் பாலம் கட்டறச்சே உலகம் தட்டையா இருந்திச்சோ என்னவோ. பிறகு கலிலியோ காலத்துல உருண்டையா மாறியிருக்கலாம் இல்லையா? பிரபஞ்சம் மாறின்டே இருக்கில்லியோ?

நம்ம மகா விஷ்னு மூனே அடில உலகத்த அளந்தாரே அப்ப தட்டையா இல்ல உருண்டையா? அவர் எந்தெந்த இடத்திலெல்லாம் அடிவெச்சார்?


------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

Unknown said...

உலகம் தட்டை என்று குரானில் எங்கு இருக்கிறது என்பதை ஆதாரத்துடன் தரவும். இவன் சொன்னான் அவன் சொன்னான் என்று கூறாதே. எனினும் ஊருண்டை என்பதற்கான ஆதாரம் பார்க்க குர் ஆன் 18:90, இதில் ஒர் அரசர் கிழக்கிலிருந்து புறப்பட்டு மீண்டும் கிழக்கையே அடைகிறார். இதிலிருந்து உலகம் உருண்டை என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே திருக் குர் ஆன் கூறியுள்ளது. இது இறை வேதம் தான் சத்தியம் தான்.

எழில் said...

தறுதலை அய்யா,

பூமி உருண்டை என்று இந்து புத்தகங்களில் எல்லாம் எழுதி வைத்திருக்கிறது. பார்க்கறதில்லையா?

தேவலோகம், பூலோகம் என்றெல்லாம் அடி வைக்கும்போது அதெல்லாம் உருண்டையா இருந்தாத்தானே வைக்க முடியும். தட்டையா இருந்தா மேலே இடிக்குமே.. யோசிச்சி பார்க்கக்கூடாதா?

தறுதலைன்னு சரியாத்தான் பேர் வச்சிருக்கீறீர்கள்.

aik said...

பிஸ்மில்லா,

கொஞ்சம் வினவு தளத்தில் அஹ்மதியா பக்கத்தில் முழு விவாதமும் ஓடிக்கொண்டிருக்கிறது.

பாருங்கள். உலகம் தட்டை என்று குரான் சொல்கிறது என்பதை நிரூபித்ததும் எல்லா முஸ்லீம்களும் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

Siraj said...

அனைவருக்கும் இறைவனின் அமைதி உண்டாகட்டுமாக. நான் 1400 வருடங்களுக்கு முன்பே குர் ஆன் உலகம் உருண்டை என்று கூறியதற்கான ஆதாரத்தை தந்து விட்டேன், நீங்கள் தான் தட்டை என்று கூறும் வசனத்தை தரவேண்டும். மேலும் உருண்டை என்பதற்கான மற்றொரு ஆதாரம் வசனம் 79:30 seventy nine: thirty

அப்துல் அசீஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

அன்பு சகோதரர் ஸிராஜ் உலகம் உருண்டை என்று சொல்வதற்கு அல் குரானில் ஆதாரம் இல்லை.

உலகம் தட்டை என்பதனை விஞ்ஞானிகள் கூறிவருகிறார்கள்.

http://www.sacred-texts.com/earth/za/

ஜெடெடிக் வானியல் சாஸ்திரத்தில் உலகம் தட்டை என்றே கருதப்படுகிறது.

http://www.theflatearthsociety.org

என்ற ஒரு அமைப்பே இயங்கி வருகிறது. இது கிறிஸ்துவத்துக்குள்ளேயே அல்லாஹ் இறக்கியுள்ள வசனங்களை ஒப்புகொள்ளும்படி ஒரு இயக்கம் தோன்றி வெகுகாலமாக இயங்கி வருகிறது.

http://en.wikipedia.org/wiki/Christian_Catholic_Apostolic_Church

கிறிஸ்துவ கத்தோலிக அபோஸ்டோலிக் சர்ச் என்னும் அமைப்பு உலகம் தட்டை என்னும் உண்மையை வலியுறுத்தி வருகிறது.

பெட்ஃபோர்ட் லெவல் எக்ஸ்பரிமண்ட் என்னும் பரிசோதனையில் உலகம் தட்டை என்பதே நிரூபிக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
வஸ்ஸலாம்
அப்துல் அசீஸ்.

அப்துல் அஸீஸ் said...

அன்பு சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்

37:5 வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்! கீழ்திசைகளின் இறைவன்.

37:6 நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம்.

55:17 இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே! இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.

70:40 எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.

வானங்களுக்கும் பூமிக்கும் இடையே உள்ளவற்றுக்கும் என்று சொல்லும்போது மேலே வானம் என்னும் கூரை கீழே பூமி என்னும் தரை என்றுதான் இருப்பதாக பொருள். வானம் ஒரு கூரையாக எந்த வித தூண்களுமின்றி நிறுத்தியிருக்கிறான் அல்லாஹ். இரண்டுக்கும் இடையே கீழே நட்சத்திரங்களையும் (67:5 அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்) நட்சத்திரங்களுக்கு மேலே நிலவையும் வைத்து அழகு படுத்தியிருக்கிறான் அல்லாஹ். (71:15-16) ஆனால், த‌வ‌றாக‌ த‌ற்போது கிறிஸ்துவ‌ர்க‌ளும் காபிர்க‌ளும் கூறும் வானியல் சாத்திரத்தில் பூமி வான‌த்தின் ந‌டுவே உட்கார்ந்திருக்கிறது!

அன்பு சகோதரர் ரியாஸ் அவர்களுக்கு இரண்டு கீழ்திசைகள் இரண்டு மேற்கு திசைகள் என்பதன் பொருள் தெரியும் என்று கருதுகிறேன். சூரியன் பனிக்காலத்தில் ஒரு கீழ்த்திசையிலும் கோடைக்காலத்தில் ஒரு கீழ்த்திசையிலும் தோன்றுமாறு அல்லாவால் பணிக்கப்படுகிறான். அதே போல கோடைக்காலத்தில் ஒரு மேற்கு திசையிலும் குளிர்காலத்தில் ஒரு மேற்கு திசையிலும் மறையுமாறு பணிக்கப்படுகிறான். இதனாலே இரண்டு கீழ்த்திசைகளுக்கும் இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவனாக அல்லாஹ் உள்ளான்.

27:61 இல் இந்த பூமியை ஆடாத இடமாக ஆக்கியிருக்கிறேன் என்று வசனத்தை இறக்கியுள்ளான். தமிழில் அதனை வசிக்கத்தக்க இடமாக என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆடாத இடம் என்றால், நகராத இடம். ஆனால், கிறிஸ்துவர்களிடமும் காபிர்களிடமும் கேட்டால் பூமி நகர்கிறது என்றுதான் சொல்வார்கள்.

Bukhari பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3199அபூ தர்(ரலி) அறிவித்தார்.நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், ‘அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும், என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, ‘வந்த வழியே திரும்பி விடு” என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்றார்கள். இதைத் தான், ‘சூரியன், தான் நிலை கொள்ளம் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்” என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது” என்றார்கள்.

பூமியை சுற்றி வந்த சூரியன் மறையும்போது “செல்கிறது” என்ற வார்த்தை என்ன சொல்கிறது. அது மறையும்போது அதன் இயக்கத்தையே குறிக்கிறது. காபிர் விஞ்ஞானிகள் சூரியன் மறைவதன் காரணம் பூமி எதிர்த்திசையில் சுற்றுவதால் என்று சொல்கிறார்கள். ஆனால், இங்கே தெளிவாக நபி(ஸல்) அவர்கள் மறையும்போது “செல்கிறது” என்று அதன் இயக்கத்தை குறித்துள்ளார். இதிலே எங்கே பூமி எதிர்த்திசையில் சுற்றுகிறது என்ற வரி இருக்கிறது? அது உண்மையாக இருந்தால், நபி(ஸல்) அவர்கள் அதனை குறித்திருப்பார்களே!

ஒவ்வொருநாளும் சூரியன் மறையும்போது அல்லாஹ்விடம் அனுமதி கேட்கிறது. உடனே அது அளிக்கப்படுகிறது. அதனாலேயே அது பூமியைச் சுற்றி வருகிறது என்று நபி (ஸல்) அறிவுறுத்துகிறார். 36:38க்கு நபி(ஸல்) அவர்களே விளக்கம் அளித்துவிட்டார்கள். அல்லாவின் அர்ஷுக்கு கீழே ஸஜ்தா செய்யவே ஒவ்வொருநாளும் அது செல்கிறது.

ஆனால், கிறிஸ்துவ விஞ்ஞானிகளும் காபிர்களும் பூமியை சூரியன் சுற்றுகிறது என்று கூறுவார்களா? பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்றுதானே தவறாக கூறி வருகிறார்கள்?

ஆதாரப்பூர்வமான சஹி ஹதீஸ் இருக்கும்போது காபிர்களையும் கிறிஸ்துவ விஞ்ஞானிகளையும் நம்பும் உங்களை என்ன சொல்வது என்று தெரியவில்லை.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்

அன்புடன்
அப்துல் அஸீஸ்

Riyaz said...

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹ்.

அன்பு சகோதரர் அப்துல் அசீஸ்.
“படிக்க வேண்டிய வசனம்” என எழுதாமல், “படித்து சிந்திக்க வேண்டிய வசனங்கள்” என்று நான் எழுதி இருப்பதால் நீங்கள் சிந்தித்து இருக்க வேண்டும். விடை தெரியாமல், நீங்களே ஒரு பொய்யை–>/////(அன்பு சகோதரர் ரியாஸ் அவர்களுக்கு இரண்டு கீழ்திசைகள் இரண்டு மேற்கு திசைகள் என்பதன் பொருள் தெரியும் என்று கருதுகிறேன். சூரியன் பனிக்காலத்தில் ஒரு கீழ்த்திசையிலும் கோடைக்காலத்தில் ஒரு கீழ்த்திசையிலும் தோன்றுமாறு அல்லாவால் பணிக்கப்படுகிறான். அதே போல கோடைக்காலத்தில் ஒரு மேற்கு திசையிலும் குளிர்காலத்தில் ஒரு மேற்கு திசையிலும் மறையுமாறு பணிக்கப்படுகிறான். இதனாலே இரண்டு கீழ்த்திசைகளுக்கும் இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவனாக அல்லாஹ் உள்ளான்.)////அல்லாஹ மீது இட்டுக்கட்டி கூறி, உங்களயே ஒரு அநியாயக்காரறாய் ஆக்கிக்கொன்டீர்.
“பல கிழக்குத் திசைகள், பல மேற்குத் திசைகள்” — இவற்றுக்கு உங்கள் சிந்தை இட்டுக்கட்டவில்லையோ?
சரி. பரவாயில்லை. நானே சொல்கிறேன்.

உங்கள் ‘தட்டை பூமியிந்’ பெரிய சைஸ் உலக வரைபடைத்தின் மேல் வடக்கு பாத்து நின்று கொண்டு கிழ்க்கு திசை நோக்கி ஒரு கையும் மேற்கு திசை நோக்கி ஒரு கையும் நீட்டுங்கள். ஒரு கிழக்கு; ஒரு மேற்கு. அந்த
வரைபடத்தின் மேல் பலர், நிங்கள் நிற்கும் அதே பாணியில் பல இடங்களில் பலர் நின்றால் பல கிழக்கு வராது. பல மேற்கு வராது. ஒரே கிழக்கும் ஒரே மேற்கும் தான் வரும்.

ஆனால், இவர்கள் அனைவரும் ஒரு கோல வடிவ ‘குளோபில்’ இதேபோல் ஏறி நின்று கைகளை விரித்தால், விரிக்கும் திசைகள் பல காட்டும். இருவர் நின்றால் இரு கிழக்கும் இரு மேற்கும், பலர் நின்றால் பல கிழக்கும் பல மேற்கும் காட்டும்.
இதிலிருந்து புவி – உருண்டை என இவ்வசனத்திலிருந்து விளக்கம் கிடைக்கவில்லையா சகோதரரே?

நீங்கள் மிக சிறந்த – அறிவிற்சிறந்த சிந்தனை வாதி என்றால், “மூளை சிந்திக்குமா? இதயம்(கல்ப்) சிந்திக்குமா?” என்று மேலே எங்கோ யாராலோ கேட்கப்பட்டதே, அதற்கு பதில் சொல்ல முடியுமா? பதில் சொல்லுங்களேன். தெரியவில்லை என்றால், ‘க்ளு’ கொடுக்கிறேன்.
அரபி மொழியில், ‘கல்ப்’ என்றும் ‘ஃபுவாத்’ என்றும் சொற்கள் உள்ளன. புரிந்து கொள்ள சிறந்த வசனம் 28:10. இவை தனித்தனியே பல இடங்களில் வந்தாலும் இணைந்து ஒரே வசனத்தில் இங்கு வருகிறது. ஆழ்ந்த பொருள் உள்ளது. ஆனால், பல உலமாக்கள் (பிஜெ உட்பட) இவ்விரண்டு வார்த்தைக்கும் ஒரே பொருளை தவறாக கையாளுகிறார்கள்.
“சிந்திக்கவும்”. இதைதான் நம் அனைவருக்கும் அல்லாஹ் பல இடங்களில் போதிக்கிறான். சிந்திக்கவும்

அப்துல் அஸீஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

இரண்டு கிழக்குகளுக்கும் இரண்டு மேற்குகளுக்கும் இடையே சூரியன் உதிக்கவும் மறையவும் செய்கிறான். அதனாலேயே பல மேற்குகள் பல கிழக்குகள்.

அன்பு சகோதரர் ரியாஸ் அவர்களை அல்குர்ஆனை படித்து பார்க்குமாறு அன்புடன் அழைக்கிறேன். எந்த இடத்தில் உலகம் உருண்டை என்று அல்குர்ஆனில் அல்லாஹ் இறக்கியுள்ளான் என்று காட்டினால் ந‌ல்ல‌து.

உல‌க‌ம் த‌ட்டை என்று அல்குர்ஆனில் எங்கும் இல்லை என்று ச‌கோத‌ர‌ர் ரியாஸ் கூறுவ‌து விய‌ப்புக்குரிய‌து.

2.22 firaashaw
2:22 அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து¢ அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்¢ (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
Ahmed Raza Khan: Mohammed Aqib Qadri:
The One Who has appointed the earth a base for you, and the sky a canopy - and caused water to pour down from the sky, thereby producing fruits as food for you; and do not knowingly set up rivals to Allah!.
Yusuf Ali:
Who has made the earth your couch, and the heavens your canopy; and sent down rain from the heavens; and brought forth therewith Fruits for your sustenance; then set not up rivals unto Allah when ye know (the truth).
Pickthal:
Who hath appointed the earth a resting-place for you, and the sky a canopy; and causeth water to pour down from the sky, thereby producing fruits as food for you. And do not set up rivals to Allah when ye know (better).

13.3 Madda
13:3 மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்! இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்! அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Ahmed Raza Khan: Mohammed Aqib Qadri:
And it is He Who spread out the earth and made mountains as anchors and rivers in it; and in it made all kinds of fruits in pairs - He covers the night with the day; indeed in this are signs for people who ponder.
Yusuf Ali:
And it is He who spread out the earth, and set thereon mountains standing firm and (flowing) rivers: and fruit of every kind He made in pairs, two and two: He draweth the night as a veil o'er the Day. Behold, verily in these things there are signs for those who consider!
Pickthal:
And He it is Who spread out the earth and placed therein firm hills and flowing streams, and of all fruits He placed therein two spouses (male and female). He covereth the night with the day. Lo! herein verily are portents for people

who take thought.

15.19 madadnaahaa
15:19 பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்¢ ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.
Ahmed Raza Khan: Mohammed Aqib Qadri:
And We spread out the earth, and placed mountains as anchors in it, and in it grew all things by a proper

measure.
Yusuf Ali:
And the earth We have spread out (like a carpet); set thereon mountains firm and immovable; and produced therein all kinds of things in due balance.
Pickthal:
And the earth have We spread out, and placed therein firm hills, and caused each seemly thing to grow therein.

அப்துல் அஸீஸ் said...

20.53 mahdan
20:53 '(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான் இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்¢ மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான் இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்" (என்று இறைவன் கூறுகிறான்).
Ahmed Raza Khan: Mohammed Aqib Qadri:
The One Who has made the earth a bed for you and kept operative roads for you in it and sent down water from the sky; so with it We produced different pairs of vegetation.
Yusuf Ali:
"He Who has, made for you the earth like a carpet spread out; has enabled you to go about therein by roads (and channels); and has sent down water from the sky." With it have We produced diverse pairs of plants each separate

from the others.
Pickthal:
Who hath appointed the earth as a bed and hath threaded roads for you therein and hath sent down water from the sky and thereby We have brought forth divers kinds of vegetation,


43.10 mahdan
43:10 அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பிய இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் ஆக்கினான்.
Ahmed Raza Khan: Mohammed Aqib Qadri:
The One Who made the earth a bed you, and made roads for you in it, so
that you may be guided.
Yusuf Ali:
(Yea, the same that) has made for you the earth (like a carpet) spread
out, and has made for you roads (and

channels) therein, in order that ye may find guidance (on the way);
Pickthal:
Who made the earth a resting-place for you, and placed roads for you
therein, that haply ye may find your way;


50.7 madadnaahaa
50:7 மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளை அமைத்துள்ளோம். மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை (ஆண், பெண் வகையுள்ள) ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம்.
Ahmed Raza Khan: Mohammed Aqib Qadri:
And (how) We have spread the earth, and placed mountains as anchors in it, and have grown all kinds of beautiful pairs in it?
Yusuf Ali:
And the earth- We have spread it out, and set thereon mountains standing firm, and produced therein every kind of beautiful growth (in pairs)-
Pickthal:
And the earth have We spread out, and have flung firm hills therein, and have caused of every lovely kind to grow

thereon,

அப்துல் அஸீஸ் said...

51.48 farashnaahaa
51:48 இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்¢ எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.
Ahmed Raza Khan: Mohammed Aqib Qadri:
And We made the earth a base, so how well do We lay out!
Yusuf Ali:
And We have spread out the (spacious) earth: How excellently We do
spread out!
Pickthal:
And the earth have We laid out, how gracious is the Spreader
(thereof)!

71.19 bisaaTaa
71:19 'அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.
Ahmed Raza Khan: Mohammed Aqib Qadri:
'And it is Allah Who made the earth a bed for you.'
Yusuf Ali:
"'And Allah has made the earth for you as a carpet (spread out),
Pickthal:
And Allah hath made the earth a wide expanse for you

78.6 mihaadaa
78:6 நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
Ahmed Raza Khan: Mohammed Aqib Qadri:
Did We not make the earth a bed?
Yusuf Ali:
Have We not made the earth as a wide expanse,
Pickthal:
Have We not made the earth an expanse,

79:30 dahaahaa
79:30 இதன் பின்னர், அவனே பூமியை பிரித்தான்.
Ahmed Raza Khan: Mohammed Aqib Qadri:
And after it spread out the earth.
Yusuf Ali:
And the earth, moreover, hath He extended (to a wide expanse);
Pickthal:
And after that He spread the earth,

88.20 suTiHat
88:20 இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
Ahmed Raza Khan: Mohammed Aqib Qadri:
And the earth - how it has been spread out?
Yusuf Ali:
And at the Earth, how it is spread out?
Pickthal:
And the earth, how it is spread?

91:6 tahaha
91:6 பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
Ahmed Raza Khan: Mohammed Aqib Qadri:
And by oath of the earth and by oath of Him Who spread it.
Yusuf Ali:
By the Earth and its (wide) expanse:
Pickthal:
And the earth and Him Who spread it,

ஃபிராஷா, மத்த, மதத்னாஹா, மஹ்தன், தஹாஹா, ஸுடிஹட், மிஹாதா, பிஸாடா ,ஃப‌ரஷ்னாஹா

அர‌பி மொழியில் த‌ட்டை என்ற‌ வார்த்தைக்கு எத்தனை வார்த்தைக‌ள் உண்டோ அத்த‌னை வார்த்தைக‌ளையும் உபயோகித்து அல்லாஹ் அல்குர்ஆன் வ‌ச‌ன‌ங்க‌ளை இற‌க்கியுள்ளான்.

அல்குர்ஆன் அஹதீஸில் இல்லாத க‌ருத்துக்கள் யார் கூறினாலும் நிராகரிக்கப் பட வேண்டிய ஒன்று என்பது இஸ்லாத்தின் அடிப்ப்டை.

அல்லாஹ் அனைவருக்கும் தூய இஸ்லாத்தை உணர தவ்பீஃக் செய்து நேர்வழிகாட்டுவானாக ஆமீன்.

மா சலாம்.
அப்துல் அஸீஸ்

Mohamed Ashik said...

For Abdul Aziz
Please correct yourself. The following is the message from Ashik
--
ஹா ஹா ஹா…! அப்துல் அஸீஸ், காமெடி பண்ணாதீர்கள். உங்களின் காமெடி என்ன சொல்லுது?……

////// பூமியை சுற்றி வந்த சூரியன் மறையும்போது “செல்கிறது” என்ற வார்த்தை என்ன சொல்கிறது. அது மறையும்போது அதன் இயக்கத்தையே குறிக்கிறது. காபிர் விஞ்ஞானிகள் சூரியன் மறைவதன் காரணம் பூமி எதிர்த்திசையில் சுற்றுவதால் என்று சொல்கிறார்கள். ஆனால், இங்கே தெளிவாக நபி(ஸல்) அவர்கள் மறையும்போது “செல்கிறது” என்று அதன் இயக்கத்தை குறித்துள்ளார். இதிலே எங்கே பூமி எதிர்த்திசையில் சுற்றுகிறது என்ற வரி இருக்கிறது? அது உண்மையாக இருந்தால், நபி(ஸல்) அவர்கள் அதனை குறித்திருப்பார்களே!/////

——ஒரு ரயிலில் நீண்ட தூரம் பிரயாணிக்கும் நீங்கள் தூங்கி திடிரென்று எழுந்து, பக்கத்தில் விழித்துக்கொண்டு வரும் என்னிடம் விழுப்புரம் போயிடுச்சா? என்று வினவினால், சத்தியமாக அது எனக்கு காமெடியாக தோணாது. “இல்லை, போகலை” அல்லது “போயிடுச்சு” என்று உங்கள் பக்கத்தில் நபி (ஸல்) அவர்களே இருந்தாலும், நமது ‘பேச்சு வழ்க்கில்’ இப்படித்தான் பதில் கூறுவார்கள். இதை வைத்து,……. “விழுப்புரம் எனும் ஊர், ஒரு இடத்தில் நிற்காமல் போய்க்கொண்டே இருக்கு……. என இஸ்லாம் கூறுகிறது”……. என நிங்கள் கூறினால் தான் — கூறுவதுதான் மிகப்பெரிய காமெடி.

///// …..கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, ‘வந்த வழியே திரும்பி விடு” என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்றார்கள். இதைத் தான், ‘சூரியன், தான் நிலை கொள்ளம் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்” என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது” என்றார்கள்./////——இது நபிகள் (ஸல்) அவர்களின் கியாமத் நாளின் முன்னறிவிப்புகளில் ஒன்று. 1040 miles/hour வேகத்தில் சுழாலும் ஒரு பொருள் நின்று திரும்பி சுற்ற ஆரம்பித்தால்…..தொடர்ந்து ஸூரா 99 & 101 -ஐ படித்து உணரவும்.
//////அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.///// — இந்த ஒரு வரிக்காகத்தான் உங்களுக்கு பதில் எழுதுகிறேன்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Riyaz said...

அன்பு சகோதரர் அப்துல் அசீஸ்.
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹ்.

ஒரு மிகப்பெரிய கோளத்தின் மேல் எதையும் விரிக்க முடியாதா?
ஃபிராஷா, மத்த, மதத்னாஹா, மஹ்தன், தஹாஹா, ஸுடிஹட், மிஹாதா,

பிஸாடா ,ஃப‌ரஷ்னாஹா

அர‌பி மொழியில் த‌ட்டை என்ற‌ வார்த்தைக்கு எத்தனை வார்த்தைக‌ள்

உண்டோ அத்த‌னை வார்த்தைக‌ளையும் உபயோகித்து அல்லாஹ்

அல்குர்ஆன் வ‌ச‌ன‌ங்க‌ளை இற‌க்கியுள்ளான்.
(பிறகு ஏன் தட்டை என்ற வார்த்தையை மட்டும் உபயோகிக்கவில்லை?)

அல்குர்ஆன் அஹதீஸில் இல்லாத க‌ருத்துக்கள் யார் (அப்துல் அஸீஸ்)

கூறினாலும்

நிராகரிக்கப் பட வேண்டிய ஒன்று என்பது இஸ்லாத்தின் அடிப்ப்டை.

அல்லாஹ் அனைவருக்கும் (உங்களுக்கும் சேர்த்து) தூய இஸ்லாத்தை உணர தவ்பீஃக் செய்து

நேர்வழிகாட்டுவானாக ஆமீன்.
(முதலில் நிங்கள் லைப்ரரிக்கு சென்று பல அறிவியல் நுல்களை படித்தபின் குரானை சிந்தியுங்கள். அது உங்களை சரியான பாதையில் இன்ஷா அல்லாஹ் சிந்திக்க வைக்கும்).

அப்துல் அஸீஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
-----------------------
அன்பு சகோதரர் ஆஷிக்,

குரானும் ஹதீஸும் பேச்சுவழக்கில் உபயோகப்படுத்தும் ஏராளமான தவறான புழக்கங்களை கொண்டுள்ளது என்று நீங்கள் எழுதிவிடலாமே? இன்னும் உங்களது நிலைப்பாடு தெளிவாகிவிடும். ஒவ்வொரு சொல்லும் குரானிலும் ஹதீஸிலும் முக்கியம். ஒரு சொல் எப்படி உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை வைத்தே பெரிய சழக்குகளை இமாம்கள் தீர்த்து வைத்துள்ளார்கள். நீங்கள், குரானும் ஹதீஸும் பேச்சுவழக்குமாதிரி, ... ஏராளமான தவறுகள் இருக்கும் என்று சொல்கிறீர்கள். எங்கே போய் முட்டிக்கொள்வ‌து என்று தெரிய‌வில்லை.

ஒவ்வொருநாளும் சூரியன் மறையும்போது அர்ஷுக்குக் கீழே சஸ்தா செய்வதற்காக செல்கிறது என்று நபி(ஸல்) தெரிவிக்கிறார்கள். பின்னால், அல்லாவிடம் அனுமதி கேட்கும் என்று இருக்கிறது. அது உங்களது பூமி கோளத்தில் எந்த இடத்தில் அனுமதி கேட்கிறது என்று கூறமுடியுமா? அரேபியாவில் மறைந்த பின்னாலா? அல்லது இந்தியாவில் மறைந்த பின்னாலா? அல்லது அமெரிக்காவில் ம்றைந்த பின்னாலா? இதனை "பேசசுவழக்கில்" எப்படி புரிந்துகொள்வீர்கள்? உங்களது உலகம்தான் உருண்டையாயிற்றே? எந்த இடத்தில் மறைந்த பின்னால் அனுமதி கேட்கும் என்று சொல்லுங்களேன். உருண்டையான‌ உல‌க‌த்தில் ஒரு இட‌த்தில் ம்றைந்த‌ சூரிய‌ன் இன்னொரு இட‌த்தில் தானாக‌ ம‌த்தியான‌ வெயிலாக‌ இருக்குமே? எந்த‌ இட‌த்தில் அனும‌தி கேட்ட‌து? எப்போது அனும‌தி கேட்ட‌து?

---


அன்பு சகோதரர் ரியாஸ்,
கோள‌த்தின் மீது விரிப்ப‌தாக‌ எங்கே அல்லாஹ் இற‌க்கியிருக்கிறான்? நீங்க‌ள் சொல்லும் கோள‌த்தையே அவ‌ன் விரிப்பு, ப‌டுக்கை, த‌ட்டையாக‌ ஆக்கியிருப்ப‌தாக‌ கூறுகிறான். நீங்க‌ள் என்ன‌டாவென்றால், கோள‌த்தின் மீது விரித்திருப்ப‌தாக‌ இட்டுக்க‌ட்டுகிறீர்க‌ள். கோள‌ம் என்ற‌ வார்த்தை எங்கே இருக்கிற‌து? அல் குர்ஆனிலும் ஹதீஸிலும் இல்லாத‌ சொல்லை இட்டுக்க‌ட்டுவ‌து யார்? நானா நீங்க‌ளா?

//(முதலில் நிங்கள் லைப்ரரிக்கு சென்று பல அறிவியல் நுல்களை படித்தபின் குரானை சிந்தியுங்கள். அது உங்களை சரியான பாதையில் இன்ஷா அல்லாஹ் சிந்திக்க வைக்கும்).//

நீங்கள் இதனைத்தான் செய்கிறீர்கள் போலிருக்கிறது. முதலில் அறிவிய‌ல் நூல்க‌ளை ப‌டித்துவிட்டு அத‌ற்கு த‌குந்தாற்போல‌ குரானை சிந்திப்ப‌து ச‌ரியான‌தா என்று சிந்திக்க‌ வேண்டுகிறேன். இன்று த‌க்காளி ந‌ல்லது என்று அறிவிய‌ல் சொல்லும். நாளை த‌க்காளி கெட்ட‌து என்று அறிவிய‌ல் சொல்லும். அத‌ற்கு ஏற்றாற்போல‌ குரானை ப‌டிக்க‌ வேண்டுமா? அல் குர்ஆன் அப்படிப்பட்ட தினத்துக்கு ஒருமுறை மாறும் புத்தகமா?


அல் குர்ஆனோ அல்லது ஹதீஸோ உங்கள் இஷ்டப்படி எல்லாம் வளைத்து பொருள் கூற முடியாது. பொருள் கூறக்கூடாது. அதனால்தான் இத்தனை பித்னாக்கள் நடக்கின்றன. நபி(ஸல்) அவர்களே பொருள் கூறிவிட்டபின்னும் அவரை விட தனக்குத்தான் நிறைய தெரியும் என்பது போல பிஜே மற்றும் இதர ஆட்கள் போடும் கூத்துக்கு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

வஸ்ஸலாம்
அப்துல் அஸீஸ்

Anonymous said...

நல்லா சிரிச்சேன்.மூளை மாற்று அறுவை சிகிச்சை எதாவது இருந்தா இவங்களால் கொல்லப்பட்ட காபிர்களின் மூளையை எடுத்து வைக்கலாம்.

Anonymous said...

யாராவது ஒரு மௌலவியை பெற்றோல் விற்று வந்த பணத்தில் விண்வெளி சுற்றுலா பயணியாக அனுப்பினால் விடயம் முடிந்தது.

Azeez said...

உலகம் உருண்டை என்று சொன்ன கலீலியே கிருஸ்தவர்களாள் துன்புறுத்த பட்டார்

Azeez said...

உலகம் உருண்டை தான் குரான் உருண்டை என்று தான் கூருகிறது