இரட்டை குவளை முறை ஒழிக்க இந்து சமுதாயம் ஒருமனதாக முனைந்து இந்த இழிவை நீக்க வேண்டும் என்று போராட வேண்டும்.
நன்றி தட்ஸ்டமில்
=--
தென்காசி கிராமங்களில் இரட்டை டம்ளர்-ஆதி தமிழர் பேரவை புகார்
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 29, 2008
நெல்லை: தென்காசி தாலுகா கிராமங்களில் உள்ள டீக் கடைகளில் இன்னும் கடைபிடிக்கப்பட்டு வரும் இரட்டை டம்ளர் முறை கொடுமையை ஒழிக்க கோரி ஆதி தமிழர் பேரவை சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் மாயா, செயலாளர் மந்திரமூர்த்தி, துணை பொதுச் செயலாளர் மணிவண்ணன், மாநில இளைஞரணி செயலாளர் சங்கர் ஆகியோர் தலைமையில் அய்யாபுரம் கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரில் சென்று மனு கொடுத்தனர்.
அதில், தென்காசி தாலுகா அய்யாபுரம் பகுதியில் அருந்ததியர் சமுகத்தைச் சேர்ந்த 120 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் உள்ள டீக்கடைகளில் இரட்டை டம்ளர் முறை இன்றும் வழக்கத்தில் உள்ளது. பனவடலி சமுத்திரம் மற்றும் பலபத்திர ராமபுரம் பகுதிகளிலும் இரட்டை டம்ளர் முறை உள்ளது. இதுகுறித்து கடந்த 20ம் தேதி தென்காசி போலீசில் புகார் செய்தோம்.
நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையறிந்த டீக்கடைகாரர்கள் அருந்ததியர் மக்களை மிரட்டி வருகின்றனர். டீக்குடிக்க சென்றபோது, வீட்டில் இருந்து டம்ளர் கொண்டு வரும்படி கூறுகின்றனர். அவமரியாதையாக பேசுகின்றனர். எங்களுக்கு பாதுகாப்பும், இரட்டை டம்ளர் முறையை ஒழிக்க நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment