குழந்தையுடன் கர்ப்பிணி பலி- டாக்டர்கள் சஸ்பென்ட்
சனிக்கிழமை, ஏப்ரல் 26, 2008
கான்பூர்: சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மறுத்ததால் கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவமனைக்கு வெளியிலேயே பிரசவம் நடந்தது. ஆனால் அந்த பெண்ணும் குழந்தையும் அடுத்த சில மணி நேரத்தில் உயிரிழந்தனர். இதையடுத்து 8 டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
உத்திர பிரதேசம் பண்டா பகுதியைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.
ஆனால், பணமும், 3 பாட்டில் ரத்தமும் கொண்டு வந்தால்தான் அந்த பெண்ணை அட்மிட் செய்வோம் என்று டாக்டர்கள் கூறி விட்டனர். இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமானது. வலியால் துடிதுடித்த அந்த பெண்ணுக்கு மருத்துவமனையை ஒட்டியுள்ள சாலையிலேயே குழந்தை பிறந்தது.
ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது. அந்த பெண்ணும் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை பார்த்த உறவினர்கர்கள் கதறி அழுதனர். இந்த கொடுமையான சம்பவத்திற்குக் காரணமான 8 அரசு டாக்டர்களை மாநில அரசு தற்போது சஸ்பெண்ட் செய்துள்ளது.
1 comment:
கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது.
Post a Comment