Tuesday, April 24, 2007

திருவாளர் அபிஷேக் பச்சன், திருமதி ஐஸ்வர்யா ராய் திருமணத்தில் நிகழ்ந்த சடங்கு

அன்பு சகோதரர் இறைநேசன் அவர்கள் என்னை எழில் அண்ணாச்சி என்று அன்புடன் அழைத்து திருவாளர் அபிஷேக் பச்சன், திருமதி ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் திருமணத்தில் நடந்த சில சடங்குகளைப் பற்றி நான் ஏதும் கருத்து கூறவில்லையே என்று கேட்டிருக்கிறார்.

ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு சடங்குகள், ஒவ்வொரு பழக்கங்கள், ஒவ்வொரு நிவர்த்தி கடன்கள் இருக்கின்றன. இவை அந்தந்த சமூகங்களின் நல்லெண்ணத்தின் பிரதிபலிப்பாகவும், திருமண தம்பதியினர் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணத்திலும் உருவாகியிருக்கின்றன.

நல்லெண்ணத்தில் உருவாக்கபப்ட்ட இப்படிப்பட்ட கருத்துக்கள் சில வேளைகளில் தடங்கல்களாகவும் ஆகிவிடுகின்றன. ஜோதிடத்திலும் அது குறிப்பிடும் பலன்களிலும் அது குறிப்பிடும் நிவர்த்திகடன்களிலும் எனக்கு பரிச்சயம் கிடையாது. இப்படிப்பட்ட நம்பிக்கைகள் எல்லா சமூகங்களிலும் இருக்கின்றன. மசூதிகளில் ஊதினால் குணம் அடைந்துவிடும் என்று நம்புபவர்களும், சுவிசேச கூட்டங்களில் தலையை தட்டினால் குணம் அடைந்துவிடும் என்று நம்புபவர்களும் இருக்கிறார்கள். அது அவரவர் நம்பிக்கை. அந்த நம்பிக்கை மற்றவர்களை பாதிக்காமல் இருக்கும் வரைக்கும் நாமும் அதனை கேவலப்படுத்த வேண்டாமே.

உதாரணமாக நீங்கள் ஜாதி வித்தியாசத்தால் துயரப்படும் இந்தியர்களை பற்றி எழுதுவது மிகச்சரியானது. அது உங்கள் நம்பிக்கையை தாண்டி மற்றவர்களை துயரப்படுத்துகிறது. அதனை கண்டிக்கவேண்டியது நியாயமானது.

உங்கள் நம்பிக்கை மற்றவர்களது உரிமைகளையும், மற்றவர்களது உயிரையும், மற்றவர்களது உடைமைகளையும் பறிக்கும்போது, நீங்களும் அவற்றை பற்றி எழுதுங்கள்.

மிக்க நன்றி சகோதரரே.

5 comments:

எழில் said...

நடிகர் ராஜ்குமார் அவர்களை தெய்வமாக வழிபடுவதை விமர்சித்து ஒரு பதிவை இனிய சகோதரர் இறைநேசன் எழுதியிருக்கிறார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பது அய்யன் வள்ளுவன் வாக்கு.

சகோதரர் முத்துக்குமரன் கூட இது பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.

நாட்டார் தெய்வங்களின் வரலாறு இது போன்று பல உள.
நன்றி
எழில்

கால்கரி சிவா said...

//உங்கள் நம்பிக்கை மற்றவர்களது உரிமைகளையும், மற்றவர்களது உயிரையும், மற்றவர்களது உடைமைகளையும் பறிக்கும்போது, நீங்களும் அவற்றை பற்றி எழுதுங்கள்//

சபாஷ் சரியான அறிவுரை.

"அவர்களில் வஞ்சூர் என்ற முதியவர் மதுரை சித்திரை திருவிழாவை கிண்டல் செய்த விடுதலை பத்திரிகை செய்தியை எடுத்து போட்டு புளகாங்கிதம் அடைந்து இருக்கிறார். இவர்கள் மக்காவிற்கு சென்று சிறு சிறு கற்களால் சத்தானை ஒவ்வொரு வருடமும் லட்சகணக்கானவர் கொல்வார்கள். ஒரே பாம்பில் சாத்தனை அடித்து தூக்க வேண்டியதுதானே. பாம் வைக்கவா இவர்களுக்கு தெரியாது" என என் நண்பன் ஒருவர் கேட்டார். "சார் சத்தம் போட்டு பேசாதீங்க அப்புறம் காழ்புணர்ச்சி என சொல்லி ஆளை அனுப்பிவிடுவாங்கன்னு" அவரை அடக்கிவைத்தேன்

Anonymous said...

எழில், நடிகர் ராஜ்குமார் பற்றிய இறைநேச்ன் பதிவில் எழுதியதை அவர் வெளியிடவில்லை.

இதுதான் நான் எழுதியது.

--
உங்கள் கதையில் உங்களது சாத்தானிடம் உங்களது அல்லா சாமியின் பப்பு வேகவில்லை என்பதைப் போல எடுத்துக்கொள்ளுங்களே.

-

Anonymous said...

//..............அது அவரவர் நம்பிக்கை. அந்த நம்பிக்கை மற்றவர்களை பாதிக்காமல் இருக்கும் வரைக்கும் நாமும் அதனை கேவலப்படுத்த வேண்டாமே.

உதாரணமாக நீங்கள் ஜாதி வித்தியாசத்தால் துயரப்படும் இந்தியர்களை பற்றி எழுதுவது மிகச்சரியானது. அது உங்கள் நம்பிக்கையை தாண்டி மற்றவர்களை துயரப்படுத்துகிறது. அதனை கண்டிக்கவேண்டியது நியாயமானது.

உங்கள் நம்பிக்கை மற்றவர்களது உரிமைகளையும், மற்றவர்களது உயிரையும், மற்றவர்களது உடைமைகளையும் பறிக்கும்போது, நீங்களும் அவற்றை பற்றி எழுதுங்கள்.//

எழில் உமது இந்தப் பதிலிலேயே இந்துத்துவப் பார்ப்பன முகம் பல்லிளிக்கின்றதே! உமது இந்துத்துவக் கண்களுக்கு அது தெரிகின்றதா?

ஒரு முஸ்லிமான ஆமினா வதூத் இமாமாக நின்று ஜமாஅத் தொழுகை நடத்தியதில் எந்த இந்துத்துவ வாதியின் உரிமையும் உயிரும் பறிபோயின? அதுபற்றி அரைவேக்காட்டு விந்தன் தனது மனவக்கிரத்தைக் கொட்டிப் பதிவிட்டபோது யோக்கிய வேஷமிடும் எழிலுக்கு இப்போதுள்ள புத்தி எங்கே போயிருந்தது?

ஒரு முஸ்லிமான இம்ரானாவின் விவகாரத்தில் தேவ்பந்த் மதரஸா தீர்ப்பு வழங்கியபோது(அது தவறாகவே இருந்தாலும்) எந்தப் பாப்பானின் உரிமையும் உயிரும் பாதிக்கப் பட்டன. அப்பொழுது ஆர் எஸ் எஸ் / இந்துத்துவாக் கும்பலும் பார்ப்பனக் குஞ்சு வருடிகளும் கத்தித் தீர்த்ததற்குக் காரணம் என்ன என்று கூற முடியுமா?

முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதோ அல்லது அவர்கள் தலாக் விடப்படுவதோ எந்தப் பார்ப்பனப் பெண்ணின் உயிர்/ உரிமை பறித்தது என்பதைக் காண்பிக்க இயலுமா?


இப்படிப் பார்ப்பனர்களும் அவர்களது அடிவருடிகளும் பதிவிட்டும் பின்னூட்டத்தில் ஜல்லியடித்தும் இஸ்லாமியரின் நம்பிக்கையைக் கேலி செய்தபோது எழில் 'அன்னாசி'ப் பழம் பிடுங்கப் போயிருந்தாரா?

//அது அவரவர் நம்பிக்கை. அந்த நம்பிக்கை மற்றவர்களை பாதிக்காமல் இருக்கும் வரைக்கும் நாமும் அதனை கேவலப்படுத்த வேண்டாமே.//

நான் மேலே சுட்டிய விஷயங்கள் முஸ்லிம் அல்லாத எந்தெந்த பார்ப்பன/இந்துத்துவ குஞ்சுகளை பாதித்தன என்பதை எழில் அண்ணாச்சி(?) கூறுவாரா?

அண்ண்ணாத்தே, சும்மா டண்கணக்கா தத்துவம் அவுத்துவுட்டா மட்டும் போதாது. அது போல மொதல்ல நடந்து காட்டணும்.

மொதல்ல மத்தவங்க நம்பிக்கைகள மதிக்க கத்துக்கங்க. அதுக்கு பின்னாடி இந்த யோக்கிய தத்துவங்களயும் நொள்ள வெளக்கங்களையும் கொடுக்கலாம். இன்னா? பிர்தா ?

எழில் said...

மற்றவர்கள் என்றால் உங்கள் சமூகத்துக்கு வெளியே இருப்பவர்கள் மட்டும் அல்ல. உங்கள் சமூகத்தின் உள்ளே இருப்பவர்களும் கூடத்தான்.
ஒருவர் நடத்தும் சடங்கு இன்னொருவருக்கு அநீதியாக இருந்தால் கேள்வி கேளுங்கள். அது அவரைப்பொறுத்தமட்டில் ஏதோ செய்துகொண்டு போனால் உங்களுக்கு என்ன பிரச்னை?
இம்ரானா விவகாரத்தில் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி. அதனை இந்துக்கள் முஸ்லீம்கள் எல்லோருமே கேள்வி கேட்டார்கள்.
தலித்துகள் பிரச்னை இருக்கிறது. அதனை முஸ்லீம்களும் கிரித்துவர்களும் பேசவில்லையா? அதனை இந்துக்களின் பிரச்னை என்று விட்டு சென்றுவிட்டார்களா? அந்த பிரச்னையை இந்துக்கள் முஸ்லீம்கள் கிறிஸ்துவர்கள் என்று எல்லோருமே தானே பேசுகிறார்கள்?

உங்களது மதக்கண்ணாடிகளை கழட்டிவிட்டு பாருங்கள். இந்த விஷயம் புரியும்.