Saturday, April 07, 2007
தமிழகம் பாகிஸ்த்தானாக மாற்றப்படும் அபாயம்
எங்கு போய் முடியும் ?
மேலப்பாளையத்தில் அந்தக் கொடுமை நடந்திருக்கின்றது. கடுமையாக கண்டிக்க வேண்டிய தண்டிக்கப்பட வேண்டிய கொடுமை.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆண்டவர் தெருவைச் சேர்ந்த ஒரு மும்தாஜ் என்ற பெண்ணை அதே ஊரைச் சோர்ந்த இம்ரான் கான் (19) முஹம்மத் மைதீன் (21) ரசூல் மைதீன் (22) நவுஷாத் (18) சாகுல் அமீது (27) முகமது உசேன் (எ) அல்லப்பா (23) ஆகியோர் நடுரோட்டில் கத்தியால் வெட்டியும் குத்தியும் கொலை செய்துள்ளனர். கொலை செய்யப் பட்ட பென் விபச்சாரத்தில் ஈடுபட்டதாலும் கண்டித்தும் தவறான நடத்தையை திருத்திக் கொள்ள மறுத்ததாலும் கொலை செய்தோம் என்று இந்த இளைஞர்கள் காவல் துறையினரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றார்கள்.
முதலாவதாக, ஒரு மனித உயிரைப் பறிக்கின்ற உரிமையை இவர்களுக்குத் தந்தது யார்?
எல்லாவற்றையும் வன்முறையால் போட்டுத் தள்ளிவிடுவதால் தீர்த்துவிட முடியும் என்கிற சிந்தனை எங்கு போய் முடியும்?
நன்றி சமரசம்
--
நன்றி தினமலர் செய்தி
திருநெல்வேலி: மேலப்பாளையத்தில் பெண்ணை குத்திக் கொன்ற வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்
திருநெல்வேலி: மேலப்பாளையத்தில் பெண்ணை குத்திக் கொன்ற வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். "மதக் கோட் பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால், கொலை செய்தோம்' என அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்
நெல்லை மேலப்பாளையம் ஆண்டவர் தெருவைச் சேர்ந்தவர் மும்தாஜ் (38). கணவர் ஷாஜகான் பிரிந்து சென்று விட்டதால் மும்தாஜ் தனியே பீடிச் சுற்றி பிழைப்பு நடத்தி வந்தார். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த சிலருடன் தவறாக பழகியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமுற்ற அந்த பகுதி இளைஞர்கள் கடந்த 9ம் தேதி பட்டப்பகலில் மும்தாஜை நடுரோட்டில் தரதரவென இழுத்து வந்து குத்திக் கொலை செய்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் மேலப்பாளையம் சாகுல் அமீது (27), ரசூல் மைதீன்(22), நவுஷாத் அலி(19), இம்ரான், முகமது உசேன் அல்லாப்பா, முகமது மைதீன்(23) ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் முகமது மைதீன் பி.ஏ., இரண்டாமாண்டு பட்டப்படிப்பும், இம்ரான் ஐ.டி.ஐ.,யிலும் படிக்கும் மாணவர்கள் . நவுஷாத்தின் அண்ணன் ஷாகுல் அமீது என்பவரை தேடி வருகின்றனர்.
மும்தாஜ் அதே பகுதியைச் சேர்ந்த பீடி நிறுவன ஊழியர் ஒருவருடன் தவறாக பழகுவதை பார்த்து அவரை இவர்கள் மிரட்டியுள்ளனர்.
பீடி நிறுவன ஊழியர் கேரளாவுக்கு தப்பிச் சென்றதால் உயிர் பிழைத் துள்ளார். மும்தாஜை இவர்கள் மிரட் டிய போது அவர் பணியவில்லை.
தங்கள் மதக் கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால், மும்தாஜை குத்திக் கொலை செய்தோம் என ஆறு பேரும் கூறி இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
---
தவறான மார்கத்தில் சென்று தீய போதனைகளால் திசை மாறி போகும் இந்த தமிழ் இளைஞர்கள் உண்மையான அன்பு வழி இறைவழி நாட இறையருள் புரியட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
யார் இந்த அப்பாவி இளைஞர்களுக்கு இவ்வாறு போதித்தது என்று கண்டறிந்து அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
வாய் மூடி மவுனமாக இருப்பது நம் தமிழ் சமூகத்துக்கு கேடு!
//இளைஞர்களுக்கு இவ்வாறு போதித்தது என்று கண்டறிந்து அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
//
அது என்ன அவ்வளவு பெரிய ரகசியமா?
:-((
எல்லாம் தெரிந்ததுதான். அந்த நபருக்குத்தான் தமிழ்நாட்டு வக்ஃப் வாரிய தலைவர் பதவி கொடுத்திருக்கிறார் கலைஞர் !
சே!
yaar?
tip of the ice berg?
கொலையுண்ட தமிழ் பெண்ணும் பரிதாபத்துக்குரியவர், கொலை செய்த இந்த தமிழ் இளைஞர்களும் பரிதாபத்துக்குரியவர்கள்.
எயதவர்கள் இருக்க அம்பை நோகிறார்கள்..
இந்த இளைஞர்களைப் பார்த்துப் பரிதாபப் படுகிறீர்கள். சரி, அது உங்கள் மனிதாபிமானத்தைக் காட்டுகிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் ஒரு புத்தகம், ஒரு மதம் ஒரு கருத்துக் கோட்பாட்டுக்காக ஒரு சக மனிதரைக் கொல்வது என்பது எத்தனை ஆபாசமான செயல், எத்தனை அருவருப்பான செயல்? அந்தப் பெண் இவர்கள் நடுத்தெருவுக்கு இழுத்து வரும்போது என்ன கதறல் கதறி இருப்பார்? அது கேட்டு இவர்கள் மனம் சிறிதாவது இரங்கியதா? அசைந்ததா?
போகட்டும், நடுத்தெருவில்தான் குத்தி இருக்கிறார்கள், ஊரில் இருந்தவர்கள் என்ன செய்தார்களாம்?
இதுவும் அமைதிக்காகப் பாடுபடும், அமைதியைப் போதிக்கும் 'மதத்தின்' விளைவுதானே? நெறி தவறிய பெண் என்று தண்டிக்க முயன்றவர்கள் எவராவது அந்தப் பெண் அல்லது அவரது குடும்பத்துக்கு ந்ல்ல ஒரு வாழ்க்கை வாழ ஏதும் உதவி செய்திருக்கலாமே?
மேலும் திருமணம் தாண்டி உறவு வைப்பது இந்தியாவில் சட்ட விரோதம். இதைக் குறித்து உள்ளூர் போலிஸில் ஒரு கூட்டமாகப் போய்ப் புகார் கொடுத்து அப்பெண் மீது சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்க ஏன் இவர்கள் முன்வரவில்லை?
இவர்கள் ஏதும் அறியாதவர்கள் போலவும், யாரோ தூண்டித்தான் இப்படிச் செய்திருக்கிறார்கள் என்றும் பரிதாபப் படுவது அர்த்தமற்ற செயல். சொல்வார் சொன்னால் கேட்பாருக்கு அறிவு எங்கே போயிற்றாம்?
நன்றி ராஜ், நன்றி அனானி, நன்றி கடைசி அனானி,
//ஆனால் ஒரு புத்தகம், ஒரு மதம் ஒரு கருத்துக் கோட்பாட்டுக்காக ஒரு சக மனிதரைக் கொல்வது என்பது எத்தனை ஆபாசமான செயல், எத்தனை அருவருப்பான செயல்? //
உண்மைதான்.
என்ன செய்வது. நீங்கள் சொல்வதில் உள்ள எளிய லாஜிக் எனக்கு புரிகிறது. ஆனால், தற்கொலைப்படையாக தன்னையும் மற்றோரையும் பொசுக்கும் அளவுக்கு மதவெறியேறி கொல்லுவதை தூண்டுவதும் புத்தகங்கள்தானே.
அந்த புத்தகங்களுக்கு புனித பிம்பங்கள் அளித்து உச்சாணி கொம்பில் வைத்து மனிதர்களை நம்பவைத்து ..
அதனைத்தான் மூளைச்சலவை என்று சொல்கிறார்கள்..
தவறான சொல்புத்தியால் சுயபுத்தி அமுங்கி காணாமல் போய்விடுகிறது.
Post a Comment