கராச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் லால் மசூதியின் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்கள்.
இந்த மாபெரும் கூட்டத்தை அமைத்தது எம்.க்யூ. எம் என்ற அமைப்பு. இந்த அமைப்பு பிரிவினையின் போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்ற முஸ்லீம்களது அமைப்பு.
இந்த அமைப்பின் தலைவரான அல்டாப் உசேன் என்பவர் பாகிஸ்தானிலிருந்து நாடு கடத்தப்பட்டு லண்டனில் வசிக்கிறார். அவரது டெலிபோன் பேச்சோடு இந்த கூட்டம் நடந்தது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமி இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
லாகூர் கராச்சி ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடந்த இந்த போராட்டத்தின் படங்களையும் கூட்டத்தையும் இங்கே காணலாம்.
http://www.mqm.org/English-News/Apr-2007/news070408.htm
இது பற்றிய கூகுள் செய்திகோவை
5 comments:
They are reaping what they sow
Thanks for the good news..
These people shd convert to Hinduism. That is the only way to consolidate their opposition to extremism.
நல்ல செய்தி தானே?
பின்ன ஏன் புகார் பத்திரிக்கை வாசிக்கிறீர்கள்?
பாக்கிஸ்தானிய மக்கள் யார்? இஸ்லாமியர்கள் தானே!
இஸ்லாமிய தீவிரவாதி -
மக்கள் மட்டும் பாக்கிஸ்தானியர்களா?
என்ன ஒரு நியாயமுங்க இது?
தலைப்பை இப்படி மாத்துங்கள்:
தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போர்க்கொடி என்றல்லவா சொல்ல வேண்டும்?
அதல்லவா அந்த மக்களுக்கு 'தார்மீக' ஆதரவு அளித்தது போல் இருக்கும்.
செய்திகளை வாசிப்பதில் உங்களுக்கும் எனக்கும் இருக்கும் வித்தியாசமே இந்த மயிரிழை இடைவெளி தான்.
என்ன எழில், நான் சொல்வது சரிதானே?
நண்பன்
நான் புகார் பத்திரிக்கை வாசிக்க வில்லை. நல்ல செய்திதான்.
கூட்டத்தில் இருப்பவர்கள் லால் மசூதி தலைவரை இஸ்லாமிய தீவிரவாதி என்றுதான் திட்டினார்கள். செய்தியை படியுங்கள். ஆனால் கூடியிருந்த கூட்டம் வெறும் இஸ்லாமியர்கள் மட்டுமே என்று சொல்ல முடியாது. அவர்கள் இஸ்லாமியர்கள், இஸ்லாமியரல்லாதவர்கள், இஸ்லாமிய பெயர் கொண்ட இஸ்லாமியரல்லாதவர்கள் என்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம் தானே? அவர்களது பொது அடையாளம் பாகிஸ்தானியர் என்பது.
உங்களது மத கண்ணாடிகளை கழட்டிவிட்டு பாருங்கள். நான் சொல்வது புரியும்.
பாகிஸ்தானில் இந்துகளும் கிறித்தவர்களின் மைனாரிட்டி. அங்கே மைனாரிட்டிகளை நசுக்கினால் அது சரியான ஆட்சி.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் மைனாரிட்டி மதங்களை விமரிசித்தாலே கொலைவெறிதான்.
Post a Comment