Sunday, April 08, 2007

சற்றுமுன்: மதரஸாக்களை எதிர்த்து பாகிஸ்தானில் பொதுமக்கள் போர்க்கொடி



வாழ்க்கைக்கும் இசைக்கும் எதிராக மதரஸாக்களும், மதரஸாவில் போதிப்பவர்களும் அவர்களால் உருவாக்கப்படுகின்ற மத மாணவர்களும் நடத்தும் அராஜகத்தினால், நொந்த பொதுமக்களும், மனித உரிமை போராளிகளும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தெருவுக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள்.

இதில் லால் மாஸ்க் என்ற மசூதியையும் மதரஸாவையும் நிர்வகிக்கும் இமாம் அருகில் உள்ள பள்ளிக்கூடங்கள் சிறுவர் நூலகங்கள் என்று இட ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். அதனை யாராவது தடுத்தால், அரசாங்கத்தின் மீது தற்கொலை படையை ஏவுவேன் என்று பொதுக்கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் அரசு வேறு வழியின்றி கையை பிசைந்துகொண்டு நிற்கிறது.


இந்த சூழ்நிலையில் இப்படிப்பட்ட மதரஸாக்களை எதிர்த்து போராட்டத்தில் குதித்துள்ள சாதாரண மக்கள் பாராட்டுக்குரியவர்கள்.

இந்த சாதாரண பொதுமக்களின் போராட்டத்துக்கு என் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்.

தெய்வீக இசையை எந்த மதம் மறுக்கும்? தவறான புரிதல்களால் தவறான மார்க்கத்தில் செல்லும் அப்பாவி மனிதர்கள் புரிந்து நல் வழியை நாட இறையை பிரார்த்திப்போம்.


பிபிஸி செய்தி
பாகிஸ்தான் டெய்லி டைம்ஸ் செய்தி

கல்ப் டைம்ஸ் செய்தி

12 comments:

Anonymous said...

அரசாங்கமே கையை பிசைந்துகொண்டு நிற்கும் காலத்தில் போராடும் பொதுமக்களை பாராட்டத்தான் வேண்டும்..

சற்றுமுன்... said...

எழில் அவர்களே

தங்களது செய்திகளுக்கு சற்றுமுன் பெயரைப் பயன்படுத்துவதை தவிர்க்கலாமே. தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை வைத்துக் கொள்ள முயலுங்கள்.

நன்றி

நண்பன் said...

Ezhil,

People had come to the street in protest against the Islamist who had set fire to the videos of the Hindi / Holliwood movies.

Any law on this earth cannot stop anyone from watching personal entertainment like (fictious) movies and music.

This had got nothing to do with Islam - its only the People Vs Culture Police. And these culture police is available all over the Sub-continent - more in abundant in India than anywhereelse.

Remove the Coloured Glass and stop using a good news providers name for your purpose.!

Thanks

Nanban

எழில் said...

நன்றி நண்பன்,

If you remove your colored glasses, you can see that I have written nothing against Islam in this pathivu. I think no religion, including Islam, prohibit music.

Thanks
Ezhil

Anonymous said...

Nanban

//..Islamist who had set fire to the videos of the Hindi / Holliwood movies. ..//

Why do you say "islamist" if he has nothing to do with Islam?

நண்பன் said...

Nanban

//..Islamist who had set fire to the videos of the Hindi / Holliwood movies. ..//

Those people who assume themselves as Culture Police - thats it.

Here it is the Islamist

In India - some times - Shiv Sena or
VHP or Bajarang Dal or even some parties in Tamil Badu.

Thats it.

எழில் said...

ராஜ், நண்பன், அனானி ஆகியவர்களது கருத்துக்களுக்கு நன்றி..

கல்ச்சர் போலீஸ் என்றால் என்ன? அந்நிய கலாச்சாரம் என்று இவர்கள் கருதும் கலாச்சாரத்தை விட்டு நமது கலாச்சாரம் என்று இவர்கள் வரையறுப்பதை பின்பற்றுமாறு மற்றவர்களை வற்புறுத்துவது.

இந்த இஸ்லாமிஸ்டுகள் செய்வது என்ன?
இவர்கள் இஸ்லாமிய இசை என்று எதையும் குறிக்கவில்லை. எல்லா இசைக்கும் எதிராக இருக்கிறார்கள். எல்லா சிடிகளையும் கொளுத்துகிறார்கள். இது கல்ச்சர் போலீஸ் அல்ல. விஜிலாண்ட் மத போலீஸ்.

நண்பன் said...

// அந்நிய கலாச்சாரம் என்று இவர்கள் கருதும் கலாச்சாரத்தை விட்டு நமது கலாச்சாரம் என்று இவர்கள் வரையறுப்பதை பின்பற்றுமாறு மற்றவர்களை வற்புறுத்துவது.//

காதலிப்பது அந்நிய கலாச்சாராமா? அதுவும் இந்தியா கலாச்சாரம் தானே? ஏன் தடுக்கிறார்கள்.

எழில்,

நீங்கள் உங்கள் மனத் திருப்திக்காக ஏதேதோ எழுதிக் கொள்ளுங்கள். ஆனால் அதற்காக கண்களை மறைத்துக் கொள்ளாதீர்கள்.

பாக்கிஸ்தானிலும் கலாச்சார போலீஸ் வேலையைத் தான் அவர்கள் செய்தார்கள். மேலும் மதத்திற்கென இசை என்ற பிரிவுகள் எங்கிருக்கிறது. இனத்திற்கான இசையைத் தான் அந்த இனம் சார்ந்த மதத்தின் மீதும் பொருத்திக் கொள்கிறார்கள். மற்றபடிக்கு மதத்திற்கென இசை எங்கும் கிடையாது.

மேலும் நீங்கள் குறிப்பிட்டது போல, எல்லா இசைக்கும் இவர்கள் எதிரிகள் கிடையாது. அங்கேயும் இசையில் மண்ணின் மைந்தர்கள் உண்டு. உதாரணமாக - நுஸ்ரத் பத்தே அலி கான் போன்றவர்கள் உண்டு. அவர்களின் இசை நாடாக்கள் அழிக்கப்படவில்லை. அவர்கள் அழித்தொழித்தது - அந்நிய கலாச்சாரம் என்று கருதப்பட்ட - ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களைத் தான். மிகத் தெளிவாக குறிப்பிட்டே செய்தார்கள். பாக்கிஸ்தானில் தயாராக்கப் பட்ட படங்களை அவர்கள் அழிக்க வில்லை.

ஆக உங்கள் செய்தி தவறானது. பொய்யானது. தவறான தகவல் தருவதற்கென உங்கள் நேரத்தை செலவிடுவதை விட, வேறு ஏதாவது நல்வழியில் உபயோகப்படுத்த முனையுங்கள்.

அனைவருக்கும் நலம் பயக்கும், இல்லையா?

எழில் said...

//அவர்கள் அழித்தொழித்தது - அந்நிய கலாச்சாரம் என்று கருதப்பட்ட - ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களைத் தான். மிகத் தெளிவாக குறிப்பிட்டே செய்தார்கள். பாக்கிஸ்தானில் தயாராக்கப் பட்ட படங்களை அவர்கள் அழிக்க வில்லை.
//

Can you please let me know the source of the above affirmation?

I wrote what I got from the sources which I indicate in every one of the posts.

If you have something else, I am glad to use that too.

And more over, I know what I do just like you know what you do. So advice is not sought (and neither given)

எழில் said...

http://www.iht.com/articles/2007/04/07/asia/web-0407-islamabad~23091.php

//On Friday evening, dozens of students gathered in front of the mosque around a smoldering heap of Pakistani, Indian and English CDs and DVDs.//

நண்பன் said...

நீங்கள் சொன்னதை NDTV 24x7 செய்தியில் தான் பார்த்தேன். இங்கு படிக்கக் கிடைக்கும் செய்திதாள் - Gulf News / Khaleej Times தந்த செய்திகள் - மக்கள் எதிர்ப்புக் காட்டியது மதரஸ்ஸா மாணவர்கள் / மாணவிகள் சிலர் - விபச்சார விடுதி நடத்தி வந்த ஒரு பெண்மணியை சிறைப் பிடித்துச் சென்றதை ஒட்டி, எழுந்த சர்ச்சை. இமாம் அரசின் கட்டுப்பாட்டை மீறிய ஷாரிஅத் நீதிமன்றங்களை அமைப்போம் என்று கூறி மிரட்டியதும், தாலிபான் போன்ற காட்டுமிராண்டி தர்பாரை நடத்துவோம் என்று கூறிய இமாமை - கைது செய்ய நடத்திய போராட்டங்களுக்கான இணைப்பைத் தான் உங்கள் சுட்டிகள அனைத்தும் செய்தன.

நீங்கள் இசையைப்பற்றிக் குறிப்பிட்டதனால், அந்த டிவி செய்தியை குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் கடைசியாகக் குறிப்பிட்ட செய்தித்தாள் மட்டுமே - பாக்கிஸ்தானிய சினிமாக்களைக் குறிப்பிட்டிருந்தது.

அவர்களுக்கு இந்தி சினிமாவிற்கும், பாக்கிஸ்தானிய சினிமாவிற்கும் எத்தனை வித்தியாசம் தெரிந்திருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? ஹிந்தி சினிமாக்களுக்கும் பெயர் முதல் அனைத்தும் உருதுவில் தான் எழுதுவார்கள்.

NDTVல் ஒரு வீடியோ கடைக்காரரின் பேட்டியையும் ஒளிபரப்பினார்கள் - அவர் சொன்னது, ஆபாசத்தைப் பரப்பும் இந்திய - அமெரிக்கப் படங்களை கடையில் வைத்திருக்கக் கூடாது என்று மிரட்டப்படுவதாகக் கூறினார்.

பாக்கிஸ்தானியர்களுக்கு - அதாவது சில முல்லாக்களுக்கு - முக்கிய எதிரிகளே - இந்தியர்களும் அமெரிக்கர்களும் தான் என்னும் பட்சத்தில், அந்தக் கடைக்காரர் சொன்னது முழுக்க முழுக்க உண்மையாக இருக்கவே வாய்ப்பு இருக்கிறது.

தாலிபான் அமைப்பைப் போன்று பாக்கிஸ்தானிலும் கெடுபிடிகளையும், கட்டப்பஞ்சாயத்து முறைகளையும் அமுல்படுத்துவோம் என்று சொன்ன ஒரு இமாமை எதிர்த்துப் போர் கொடி தூக்கியதை வெறுமனே இசையை ரசிக்க விடவில்லை என்ற செய்தியை மாத்திரமே முன்னிலைப்படுத்தியது தவறு.

மற்றபடி, ஒரு விபச்சாரியை தூக்கிப் போய், இரண்டு நாட்கள் சிறை வைத்த மாணவ / மாணவிகள் செயலை ஆதரிப்பதா? அல்லது இந்த மாணவ மாணவிகள் இமாமுக்கு அடிமைப்பட்டு, தாலிபான் அமைப்பை இங்கும் கொண்டு வந்து விடுவார்களோ என்ற அச்சம் கொண்டு, இதை முளையிலே கிள்ளி விட வேண்டும் என்ற மக்களின் தவிப்பை ஆதரிப்பதா என்பதை அவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்.

Anonymous said...

Music is Haraam

References within the context of the Holy Qur`aan along with the Hadith of the Prophet confirm that music is haraam.
Interpreters of the Qur`aan have defined the term `lahwal hadith` which is mentioned in the Qur`aan as:

1) Singing and listening to songs.
2) Purchasing of male and female singers.
3) Purchase of instruments of fun and amusement.

When Sayyidana Abdullah Ibne Mas`ood , a very close companion of our Prophet was asked about the meaning of the term `lahwal hadith`, he replied

“I swear by Him besides whom there is no other God,that it refers to ghinaa (singing ).”

This statement, he repeated three times. This view is unanimously supported by the four Khalifas, the eminent Sahabaah, Tabi`een, the four Imaams and other reliable Islaamic scholars and authorities.

One hadith from the Bukhari Shareef, the most authentic Book of Hadith, further confirms unlawfulness of music and singing :

`There will be people of my Ummah who will seek to make lawful; fornication, wine-drinking and the use of ma`aazif ( musical instruments ).`

Detailed analysis of the arabic word `ma`aazif ` shows that it refers to musical instruments, the sounds of those musical instruments and singing with the accompaniment of instruments.

Closer analysis of the wordings of the Hadith establishes the prohibition of music. Firstly, the words `seek to make lawful ` shows that music is not permissible, as logically one can only seek to make lawful that which is not allowed. Secondly, if music was not prohibited, then it would not have been brought within the same context as fornication and wine-drinking.

Muslims are aware that nothing has been prohibited by Allah except that which is harmful to the welfare of a Muslim individual and the society as a whole. The divine attribute behind the prohibition of music can be comprehended by looking into the diverse influence music can have.

It is a very ignorant and misguided attitude to percieve music as a form of pleasure and passing of time, since the messages of today`s music follow a general theme of love, fornication, drugs and freedom.

< b > We find that the whole world is obsessed with the kufr idea of freedom, i.e. freedom of speech, freedom of movement, etc. In western schools and universities, we observe independence, free expression and secular thinking being encouraged. This idea of freedom, “ It`s my life, I`ll do what I want” is a predominant, underlying theme of today`s music. It is being used as a means for drilling western ideologies, which are totally contrary to Islamic Shariah and values, into the minds of Muslims. < b >

One should abstain from evil audacities such as listening to music and encourage others to do the same too.

http://www.inter-islam.org/Prohibitions/Mansy_music.htm