Thursday, September 11, 2008

தமுமுக எதிர்ப்பை மீறி ஏராளமான முஸ்லீம்கள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு ஆதரவு

மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து தமுமுக போன்ற மதவெறி அமைப்புகளை உதாசீனம் செய்யும் முஸ்லீம் பெருமக்களுக்கு வாழ்த்துக்கள்.

பழனியில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் முஸ்லிம்கள் வரவேற்பு
பழனி, செப்.7-


பழனியில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. சால்வை அணிவித்து முஸ்லிம்கள் வரவேற்பு கொடுத்தனர்.

விநாயகர் சிலை ஊர்வலம்

திண்டுக்கல் மாவட்டம் பழ னியில் ஆண்டு தோறும்இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, சிவசேனா,பாரதீய ஜன சக்தி சார்பில் விநாயகர் சிலைஊர் வலம் நடைபெறுகிறது. இதில் இந்து மக்கள் கட்சி மற்றும் சிவ சேனா ஊர்வலங்களுக்குசின்ன பள்ளி வாசல் அருகே பழனி டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம் சார்பில் முஸ்லிம்கள் வரவேற்பு கொடுப்பது வழக் கம். இதனால் மத நல்லிணக் கத்துக்கு எடுத்துக்காட்டாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங் கள் அமைகின்றன.

இந்த ஆண்டு பழனி டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன சங் கம் சார்பில் வரவேற்பு கொடுப் பதற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

முஸ்லிம்கள் வரவேற்பு

இந்நிலையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பழனியில் நேற்று விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி பழனி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பிரதிஷ்டை செய் யப்பட்ட 20 விநாயகர் சிலை கள் பழனி முருகன் கோவில் வடக்கு கிரி வீதிக்கு எடுத்து வரப்பட்டன. பாத விநாயகர் கோவில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர் ஜுன் சம்பத் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுப்பதற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத் தினர் எதிர்ப்பு தெரிவித்து இருந்ததால் சின்ன பள்ளி வாசல் அருகே வரவேற்பு கொடுக்காமல் திருஆவினன் குடி கோவில் அருகே நேற்று பழனி டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கத்தினர் வர வேற்பு கொடுத்தனர்.

சங்க செயலாளர்எம்.சாகுல் அமீது, நிர்வாக குழு உறுப்பினர் கள் சி.சாகுல்அமீது, கபூர்அலி, நிர்வாக ஆலோசகர் சையது அபுதாகிர், தலைவர்முஸ்தபா, துணைத்தலைவர் நாகூர் உசேன் ஆகியோர் திண்டுக் கல் மேற்கு மாவட்ட இந்து மக்கள் கட்சி அமைப்பாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகி களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர்.பதிலுக்கு இந்து மக்கள் கட்சியினர் முஸ்லிம் சங்க நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்தனர். இவ்வாறு மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாக ஊர்வலம் அமைந்து இருந்தது.

சிலைகள் சன்னதி ரோடு, அடிவாரம் பூங்கா ரோடு, திண்டுக்கல் ரோடு, காந்தி ரோடு, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாக எடுத்து வரப்பட்டு தேரடி தெப்பக்குளத்தில் கரைக்கப்பட்டன. ஊர்வலத் தில் தப்பு, மேளம் ஆகிய இசைக் கருவிகளின் வாசிப்புக்கு ஏற்ப இளைஞர்கள் ஆடிப்பாடிச் சென்றனர். பாரத் மாதா கி ஜே போன்ற கோஷங்களை எழுப்பினர்.

பலத்த பாதுகாப்பு

ஊர்வலத்தில் இந்து மக் கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அண்ணாத்துரை, திண்டுக்கல் மாவட்ட தலைவர் தர்ம ராஜா, ஒன்றிய தலைவர் செல்வன், செயலாளர் ஸ்ரீராம் பிரபு, மாவட்ட செயலாளர் கோபிநாத் மற்றும் பலர்கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தையொட்டி திண் டுக்கல் மாவட்ட கூடுதல் சூப் பிரண்டு சிவானந்தம், பழனி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் ஆகியோர் தலை மையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சிவில் சப்ளை தாசில்தார் சங்கரன், வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரி களும் கலந்து கொண்டனர்.

No comments: