Tuesday, September 30, 2008

அமைதிமார்க்க வெடிகுண்டு புரளியால், கோவிலில் 177 பேர் நெரிசலில் பலி

ரொம்ப திருப்தியா?



ராஜஸ்தான் கோயிலில் நெரிசல்: 177 பக்தர்கள் பலி
செப்டம்பர் 30,2008,12:40 IST



ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் பகுதியில் உள்ள புகழ் பெற்ற சாமுண்டா தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 177 பேர் பலியானார்கள். இதுவரை 40 பேரின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. ஜோத்பூரில் உள்ள சாமுண்டா தேவி கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியுள்ளது. இன்று காலை 5.30 மணிக்கு அதிகாலை பூஜை நடைபெற்றது. இதையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமுண்டா தேவி கோயிலுக்கு வந்தனர். கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று வெடிகுண்டு புரளி ஏற்பட்டது. இதனால் அங்கு கூடியிருந்த பக்தர்கள் அலறி அடித்து கொண்டு கோயிலில் இருந்து வெளியேறுவதற்காக ஓடினர். ஒரே நேரத்தில் அனைவரும் வெளியேறுவதற்காக வாசல் பகுதிக்கு வந்ததால், பக்தர்களிடையே கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு ஏராளமான பக்தர்கள் மயங்கி விழுந்தனர். அ‌தே நேரத்தில் கோயிலின் பிரம்மாண்ட கதவும் சரிந்து விழுந்துள்ளது, இதனால் பக்தர்கள் குண்டு தான் வெடித்து விட்டதோ என நினைத்து வேக வேகமாக கோயிலை விட்டு வெளியேறினார்கள். கீழே விழுந்து கிடந்த பக்தர்கள் மீது மிதித்துக் கொண்டு வெளியேறியதில் ஏராளமான பக்கதர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து ராஜஸ்தான் மாநில போலீசார் தெரிவிக்கையில், ஒரே நேரத்தில் பக்தர் அனைவரும் கோயிலை விட்டு வெளியேற முயன்றதால் தான் இந்த அசாம்பாவித சம்பவம் நடத்துள்ளது. இந்த சம்பவத்தில் மொத்தம் 177 பேர் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. 400க்கும் மேற்பட்‌டோர் காயம் அடைந்துள்ளனர். பலியானவர்களில் 40 பேரில் சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன. மற்ற உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர். சம்பவம் நடத்த கோயில் மலைப் பகுதியில் இருப்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்படுவதாகவும், மீட்பு பணிக்காக ராணுவம் விரைந்து இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே விபத்து பற்றி கேள்விப்பட்டதும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஜோத்பூர் விரைந்துள்ளார்.

No comments: