இந்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்ட பிரெஞ்சு ஜோடி
சனிக்கிழமை, செப்டம்பர் 20, 2008
தூத்துக்குடி: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முதிய ஜோடி ஒன்று, இந்து திருமண முறையால் கவரப்பட்டு திருச்செந்தூர் கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
பிரான்ஸ் நாட்டின் ஜிவோனோ என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராம் சேவியர் (70), அங்கு சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி முகவராகவுள்ளார். இந்து மதத்தின் பால் அதிகம் பற்றுக் கொண்டதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி, மகளை கடந்த 14 ஆண்டிற்கு முன் பிரிந்தார். அதன் பின், சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவருக்கும், சமூக சேவகியான அதே பகுதியைச் சேர்ந்த மேரிக்கும் (50) பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் சுற்றுலா விசாவில் அடிக்கடி புதுச்சேரி வந்து, புகழ் பெற்ற கோவில்களுக்கு சென்று வழிபட்டு வந்தனர். சீரடி சாய்பாபா, புட்டபர்த்தி சாய்பாபா, மேற்கு வங்கத்தின் மாதா அமிர்தானந்த மயி ஆகியோரின் பக்தர்களாக மாறினர். திருவண்ணாமலை கோவில் கிரிவலத்திற்கு அடிக்கடி வரும் இருவரும் துறவிகள், சன்னியாசிகளைச் சந்தித்து ஆசி பெறுவர்.
அப்போது, இல்லற வாழ்வு மூலமே இறைவனை அடைய முடியுமென அவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். அதையடுத்து, திருவண்ணாமலை சரஸ்வதி சத்ய கீர்த்தி சுவாமிகள் முன்னிலையில் நேற்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள், திருச்செந்தூர் தூண்டிகை விநாயகர் கோவிலில் சேவியர், மேரியை இந்து முறைப்படி மாலை மாற்றி தாலி கட்டி மனைவியாக ஏற்றுக் கொண்டார்.
திருமணத்தின் போது சேவியர் பட்டு வேட்டி, சட்டையிலும், மேரி பட்டுச் சேலையிலும் இருந்தனர். அவர்களை ஏராளமானோர் வாழ்த்தினர்.
தங்களது திருமணம் குறித்து இருவரும் கூறுகையில், இந்தியாவில் இன்னும் பல கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யவும், துறவிகளை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளோம். எங்களுக்கு இந்திய குடியுரிமை கிடைத்தால் ஆன்மிகப் பணியாற்ற உதவியாக இருக்கும் என்றனர்.
4 comments:
இறுதியில் வெளிநாடெல்லாம் இந்துமயமாகப்போகிறது
இந்தியாவில் மட்டும் முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் அடித்துக்கொள்ள இந்துக்கள், காஷ்மீரை விட்டு ஓடியது போல ஓடப்போகிறார்கள்.
//இறுதியில் வெளிநாடெல்லாம் இந்துமயமாகப்போகிறது//
கனவெல்லாம் ராத்திரிலதான் பாக்கணும். பகல் கனவு காணக்கூடாது. அப்புறம் பைத்தியம்னு சொல்லுவாங்க
பைத்தியமாக இருப்பது பயங்கரவாதியாகவோ பாதிரியாகவோ இருப்பதைவிடபரவாயில்லை
அனானி,
சரியான நச் பதில்
கருத்துக்களுக்கு நன்றி
Post a Comment