Friday, September 26, 2008

கேரளாவில் 2 சர்ச்கள் மீது தாக்குதல்-பதட்டம்

கேரளாவில் 2 சர்ச்கள் மீது தாக்குதல்-பதட்டம்
திங்கள்கிழமை, செப்டம்பர் 22, 2008


அலுவா (கேரளா): கர்நாடகத்தைத் தொடர்ந்து கேரளாவிலும் சர்ச்கள் மீது தாக்குல் தொடுக்கப்பட்டுள்ளது. கொச்சி அருகே 2 சர்ச்கள் மீது தாக்கப்பட்டுள்ளன.

கொச்சி அருகே உள்ள நெடும்பச்சேரி சர்வதேச விமான நிலையப் பகுதியில் உள்ள அகபரம்பு என்ற இடத்தில் உள்ள இந்த சர்ச்சுகளில் புகுந்து அங்கிருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுதொடர்பாக கிறிஸ்தவ சமுதாயத்தைச் ேசர்ந்த ஒருவரை போலீஸார் பிடித்துள்ளனர். அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர். அவர்தான் இந்த செயலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும் கேரள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வுப் படையும் அமைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த சர்ச்சுகளுக்கு மாநில உள்துறை அமைச்சர் கொடியேரி பாலகிருஷ்ணன் வந்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத நல்லிணக்கத்தை கெடுப்போர் மீது கடும் நடவடிக்ைக எடுக்கப்படும். இதுபோன்ற செயல்களை அனுமதிக்க முடியாது.

டி.எஸ்.பி உன்னிராஜன் தலைமையில் சிறப்பு புலனாய்வுப் படை அமைக்கப்பட்டு அந்தக் குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.

கைரேகை நிபுணர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அனைத்து கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது என்றார் அவர்.

தாக்குதல் நடந்த சர்ச்சுகளில் ஒன்றான ஜேகோபைட் சர்ச்சில் ஜன்னல் கண்ணாடிகள் தகர்க்கப்பட்டுள்லன. மேலும் ஒரு துறவியின் சந்தனத்தால் ஆன கட்டிலும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

அருகில் உள்ள ரோமன் கத்தோலிக் சர்ச்சின் இயேசு நாதர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இது திட்டமிட்ட தாக்குதல் என பிஷப் தாமக் சக்கியாத் கூறியுள்ளார். அரசு இதுபோன்ற செயல்களைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் சக்கியாத்.

பதட்டத்தைத் தணிப்பதற்காக உள்ளூர் போலீஸார், அமைதிக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments: