
கன்னியாகுமரியில் ஆஞ்சநேயர் சிலை அகற்றம்:இந்து முன்னணி கண்டனம்
சென்னை, செப்.30-
இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரியில் தனியார் பட்டா நிலத்தில் சொந்த பூங்காவில் சிலர் ஆஞ்சநேயர் சிலையை நிறுவினார்கள். சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி அதிகாலை 5.30 மணிக்கு அதிகாரிகள் அகற்றிவிட்டார்கள்.
இது வழிபாட்டுத்தலம் அல்ல என்று அவர்கள் அறிவிப்பு பலகையும் வைத்து இருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டமாக மாற்ற கடந்த 25 ஆண்டுகளுக்கு அதிகமாக முயற்சி நடைபெற்று வருகிறது. அமரர் தாணுலிங்க நாடார் தலைமை ஏற்று இதை தடுத்து நிறுத்தியுள்ளார். மக்களை மிரட்டி பணியவைத்து ஆஞ்சநேயர் சிலை அகற்றப்பட்ட இந்து விரோத செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. கன்னியாகுமரி மாவட்ட மக்கள் விழிப்புடன் இருந்து போராடவிட்டால் வருங்காலம் இருண்டகாலம் ஆகிவிடும்.
இவ்வாறு அறிக்கையில் ராம.கோபாலன் கூறியுள்ளார்.
1 comment:
திங்கள்கிழமை, செப்டம்பர் 29, 2008 ...........மறக்க மாட்டேன்
Post a Comment