Monday, September 22, 2008

இந்து கோவில்களை இடிக்கும் திமுக அரசு: மக்கள் மறியல்- பஸ் உடைப்பு: திருப்பூரில் பதட்டம் நீடிப்பு; இந்து அமைப்பினர் 13 பேர் கைது

கோவில் இடிப்பால் மறியல்- பஸ் உடைப்பு: திருப்பூரில் பதட்டம் நீடிப்பு; இந்து அமைப்பினர் 13 பேர் கைது

திருப்பூர், செப். 21-


கோவில் இடிக்கப்பட்ட தால் திருப்பூரில் பஸ் உடைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் 300 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக இந்து அமைப்பினர் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் ஆண்டிப் பாளையம் பஞ்சாயத்துக் குட்பட்ட பகுதியில் ஒரு குளம் உள்ளது. இதன் ஓரம் 20 பேர் ஆக்கிரமித்து குடிசை போட்டு வசித்து வந்தனர். இந்த குடிசைகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகற்றப்பட்டது. அப்போது அந்த பகுதியில் இருந்த ஒரு பழமையான கோவிலும் இடித்து அகற்றப்பட்டது.

உடனே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவில் பழமையானது அதை எப்படி இடிக்கலாம்ப என்று அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

பின்னர் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருப்பூர்- மங்கலம் ரோட் டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனே போலீசார் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற் படாததால் மறியலில் ஈடுபட்ட 180 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் திருப்பூர் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.

இதற்கிடையே சிலர் மோட் டார் சைக்கிளில் சென்று திருப்பூரில் பல இடங்களில் கடைகளை அடைக்க சொல்லி மிரட்டியுள்ளனர். புது பஸ் நிலையம் பகுதியில் ஒரு கடையை அடித்து உடைத்துள்ளனர். இதனால் அனைத்து கடைகளும் அவசர அவசரமாக அடைக்கப் பட்டது.

பின்னர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர் கள் விரைந்து வந்து அனைத்து கடைகளையும் திறக்க சொன்னார்கள். இதையடுத்து கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் திறந்து இருந்தன.

மேலும் சிலர் அனுப்பர் பாளையம், தாராபுரம் ரோடு பகுதிகளில் வந்து கொண்டிருந்த பஸ்கள் மீது சரமாரி கற்களை வீசினர். இதில் 11 அரசு பஸ்கள், 2 தனியார் பஸ்கள் உள்பட மொத்தம் 13 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து அந்த பஸ்கள் அங்கேயே நிறுத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

திருப்பூரில் மறியல், கடை அடைப்பு, பஸ் உடைப்பு சம்பவங்களால் அங்கு பதட்டமான சூழ்நிலை நில வியது. சம்பவ இடத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் விரைந்து சென்று பார்வையிட்டார்.

உடனடியாக ஆயுதப்படை போலீசார் 300 பேர் வர வழைக்கப்பட்டு திருப்பூர் நகரின் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். வழிபாட்டு தலங்களில் துப்பாக்கியுடன் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே பஸ்சை உடைத்ததாக இந்து முன்னணியை சேர்ந்த சிவபிரகாஷ், இந்துமக்கள் கட்சியை சேர்ந்த தம்பான் உள்பட இந்து அமைப்பை சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

விடிய விடிய வாகன சோதனை, ரோந்து தீவிரப் படுத்தப்பட்டது. அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு எஸ்.பி. கார்த்திகேயன் முகாமிட்டு கண்காணித்து வருகிறார்.

1 comment:

Anonymous said...

நடக்கட்டும் நடக்கட்டும்

இந்துக்களுக்கு புத்திவராது இன்னமும்