சர்கோஸி கிறிஸ்துவர்கள் மட்டுமே அடிவாங்குவது போல மன்மோகனை கேள்வி கேட்க மன்மோகன் நெளிந்தாராம்.
ஆனால், சீக்கியர்கள் தலைப்பாகை கட்டுவதற்கு பிரான்ஸ் தடைவிதித்துள்ளது. அதற்கு சர்கோஸியின் பதிலை பாருங்கள்.
''சீக்கியர்களை நாங்கள் பாரபட்சமாக நடத்தவில்லை. அவர்களை வரவேற்கிறோம். அவர்களது பாரம்பரியம், பழக்க, வழக்கங்களை நாங்கள் மதிக்கிறோம். அதேசமயம் அவர்களும் எங்களது விதிமுறைகளை மதிப்பார்கள் என நம்புகிறேன் என்றார் சர்கோஸி.
''
கிறிஸ்துவர்கள் இந்தியாவின் பழக்க வழக்கங்களை மதித்து நடந்துகொள்ளவேண்டும் என்று சொல்லும் தைரியம் உண்டா மன்மோகனுக்கு?
தூ...வெட்கம் கெட்ட கூழைக்கும்பிடு அடிமைபுத்தி இந்திய அரசியல் தலைவர்கள்.
கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்: சர்கோஸி கேள்வி-நெளிந்த மன்மோகன்
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 30, 2008 பாரீஸ்: இந்தியாவின் சில மாநிலங்களில் கிறிஸ்தவ தேவாலாயங்கள் தாக்கப்பட்டது, கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் குறித்து பிரெஞ்சு அதிபர் சர்கோஸி, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விளக்கம் கேட்டதால் அவர் தர்மசங்கடத்தில் நெளிய நேரிட்டது.
இந்திய -ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் சென்றுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
திங்கள்கிழமை மார்ஷெல் நகரில் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியை, பிரதமர் மன்மோகன் சிங்சந்தித்தபோது, அவர் இந்தியாவின் சில பகுதிகளில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் குறித்து கவலை தெரிவித்து அதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளார். இதனால் நமது பிரதமர் தர்மசங்கடத்தில் மூழ்க நேரிட்டது.
இருப்பினும் பிரான்ஸில் சீக்கியர்கள் தலைப்பாகை அணிய அனுமதி மறுக்கப்படுகிறதே என்று பின்னர் செய்தியாளர்கள் கேட்டதற்கு இந்தியாவில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவது என்பது வேறு, சீக்கியர்களுக்கு தலைப்பாகை தடை செய்யப்படுவது என்பது வேறு என்று விளக்கம் அளித்தார் சர்கோஸி.
இதுகுறித்து அவர்கூறுகையில், பிரான்ஸ் நாட்டுக்கு தாராளமாக சீக்கியர்கள் வரலாம். ஆனால் பிரான்ஸ் நாட்டின் விதிமுறைகளுக்கு அவர்கள் கட்டுப்பட வேண்டும், அதை மதிக்க வேண்டும்.
அனைவரும் சமம் என்பது பிரான்ஸின் கொள்கை. எனவே அதற்கு அனைவரும் மதிப்பு கொடுக்க வேண்டும். பிரான்ஸில் வாழும் அனைவருக்கும் ஒரே சட்டம்தான், விதிமுறைதான். இதில் யாருக்கும் விதி விலக்கு அளிக்க முடியாது.
சீக்கியர்களை நாங்கள் பாரபட்சமாக நடத்தவில்லை. அவர்களை வரவேற்கிறோம். அவர்களது பாரம்பரியம், பழக்க, வழக்கங்களை நாங்கள் மதிக்கிறோம். அதேசமயம் அவர்களும் எங்களது விதிமுறைகளை மதிப்பார்கள் என நம்புகிறேன் என்றார் சர்கோஸி.
1 comment:
சூடான கேள்வி
Post a Comment