Friday, September 26, 2008

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்ட்டில்

மீனாட்சி கோவிலுக்கு பல மடங்கு பாதுகாப்பு
வியாழக்கிழமை, செப்டம்பர் 25, 2008



மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய கோவில்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து கோவிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த பாதுகாப்பு மேலும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முழுக் கோவிலும் போலீஸ் கட்டுப்பாட்டில!

மீனாட்சி அம்மன் கோவில் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போலீஸார் பெருமளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சாதாரண உடை போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவிலின் ஐந்து நுழைவாயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 2 நுழைவாயில்கள் வழியாக மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற 3 நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளன.

பக்தர்கள் அனைவரும் தீவிரமாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கொண்டு வரும் உடமைகளும் தீவிரமாக சோதிக்கப்படுகின்றன.

கோவிலுக்குள் 24 மணி நேர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர கோவில் வளாகத்தைச் சுற்றிலும் 24 மணி நேர ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்க வைக்கும் குழுவினர் கோவிலுக்குள் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனர்.

பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், பழனி தண்டாயுதபாணி கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், கன்னியாகுமரி குமரி அம்மன் கோவில் ஆகியவற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்ைககளில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments: