Monday, September 22, 2008

ஜவஹிருல்லா முகத்தில் ஈ ஆடவில்லை. டில்லியில் குண்டுவைத்த தீவிரவாத முஸ்லீம் பரபரப்பு வாக்குமூலம்

டெல்லி குண்டுவெடிப்பு: பிடிபட்ட தீவிரவாதி சைஃப் பரபரப்பு வாக்குமூலம்
சனிக்கிழமை, செப்டம்பர் 20, 2008

டெல்லி: டெல்லியில் பல இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்து பெரும் நாசத்திற்குத் திட்டமிட்டிருந்ததாக, டெல்லியில் பிடிபட்ட தீவிரவாதி முகம்மது சைஃப் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக குஜராத் போலீஸாரால் கைது செய்யப்பட்ட முகம்மது பாஷரை, குஜராத் போலீஸார் சில தினங்களுக்கு முன்பு டெல்லி கொண்டு வந்தனர்.

அங்கு வைத்து நடந்த விசாரணையில் டெல்லியில் மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜாமியா நகரில் உள்ள கலீலா மசூதி அருகே உள்ள பத்லா ஹவுஸ் என்கிற வீட்டில், 5 தீவிரவாதிகள் பதுங்கியிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் அந்த வீட்டை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் போலீஸாரை சுட ஆரம்பித்தனர். பதிலுக்கு போலீஸாரும் திருப்பிச் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் கடும் சண்டை நடந்தது.

இந்த சண்டையின் முடிவில், இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அதீப், பக்ருதீன் என்கிற சாஜித் ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டு பேர் தப்பி ஓடி விட்டனர். முகம்மது சைஃப் மட்டும் உயிருடன் சிக்கினார். இந்த என்கெளன்டரின்போது இன்ஸ்பெக்டர் சர்மா என்பவர் குண்டுக் காயம் பட்டு உயிரிழந்தார்.

பிடிபட் தீவிரவாதி சைஃபை இன்று காலை தீஸ் ஹஸாரி கோர்ட்டில் போலீஸார் ஆஜர்படுத்தினார். அப்போது கோர்ட்டில் சைஃப் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதைத் தொடர்ந்து அவரை 14 நாள் போலீஸ் காவலில் அனுமதித்த நீதிபதி உத்தரவிட்டார்.

சைஃப் அளித்த பரபரப்பு வாக்குமூலம்:

செப்டம்பர் 13ம் தேதி டெல்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு இந்தியன் முஜாஹிதீன் தலைவர் அப்துல் சுபான் குரேஷி என்கிற தாக்கீர் காரணம் அல்ல.

டெல்லி போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட அதீப் என்கிற பாஷிர்தான் இந்த சதிச் செயலை திட்டமிட்டவர். இவர்தான் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.

அகமதாபாத், பெங்களூர், ஜெய்பப்பூர், ஹைதராபாத் மற்றும் உ.பி. ஆகிய பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களையும் கூட அதீப்தான் திட்டமிட்டு நடத்தினார்.

மொத்தம் 8 பேர்:

நாங்கள் மொத்தம் 8 பேர் சேர்ந்து டெல்லி குண்டுவெடிப்பை நிகழ்த்தினோம். தற்போது குண்டு வெடித்த இடங்கள் தவிர மேலும் பல இடங்களிலும் குண்டுகளை வெடிக்கச் செய்ய திட்டமிட்டிருந்தோம்.

நான் ரீகல் சினிமாவுக்கு வெளியேயும், சென்ட்ரல் பார்க்கின் உள்ளேயும் குண்டுகளை வைத்தேன். சஜீத் மற்றும் ஜீஷான் ஆகியோர் பரகம்பா சாலையில் குண்டு வைத்தனர். கிரேட்டர் கைலாஷ்-1 எம்.பிளாக் மார்க்கெட்டில், அதீப் குண்டு வைத்தார் என்று தெரிவித்துள்ளார் சைஃப்.

6 பேருக்கு வலை வீச்சு:

இந்த நிலையில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய மேலும் 6 பேரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்களும் டெல்லியில்தான் பதுங்கியிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

ஏற்கனவே டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். உ.பியில் 3 பேரும், ஜபல்பூரில் ஒருவரும் கைதாகியுள்ளனர். ஜபல்பூரில் கைதான முகம்மது அலி சிமி இயக்கத்திற்கு பணம் கொடுப்பவர் என்று தெரிய வந்துள்ளது.

பிடிபட்ட ஜீஷான்:

இதற்கிடையே, நேற்று போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி ஓடிய இரு தீவிரவாதிகளில் ஒருவரான ஜீஷான் இன்றுகாலை போலீஸ் வசம் பிடிபட்டார்.

இவரும் டெல்லி குண்டுவெடிப்பில் தனக்குள்ள பங்கை ஒத்துக் கொண்டார். மத்திய டெல்லியில் உள்ள ஜான்டேவலான் பகுதியில் அவர் பிடிபட்டார்.

3 comments:

Anonymous said...

இடது சாரி கயவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகளிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு பத்திரிக்கைகளில் அவர்களை போற்றி எழுதிவருவது அனைவருக்கும் தெரியும்.

கவுண்டர் கரண்ட்ஸ் என்னும் இந்த இடது சாரி வலைத்தளத்திற்கும் இந்தியன் முஜாஹித்தீன் அமைப்புக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக இந்த வலைப்பதிவு ஆதாரத்துடன் காட்டுகிறது.

Anonymous said...

ஜவஹிருல்லாவுக்கெல்லாம் சுரணை ஏது?

ஈராக்கில் குண்டுவெடித்தாலே அது இந்து அமைப்புகள்தான் வெடித்தன என்று பேசுவான்.

எழில் said...

கருத்துக்களுக்கு நன்றி