கலப்பட பால் பவுடர்: கம்யூனிஸ்டு சீனாவில் 53,000 குழந்தைகள் பாதிப்பு!
.
Monday, 22 September, 2008 12:36 PM
.
பெய்ஜிங், செப். 22: சீனாவில் கலப்பட பால் பவுடரால் 53,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
.
சீனாவில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக கலப்பட பால் பவுடரை உட்கொண்டதால் பச்சிளம் குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன.
அதன் பிறகு, கலப்பட பவுடர் பாதிப்பால்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.
இந்நிலையில் இதுவரை 53,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கலப்பட பால் பவுடரை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
22 நிறுவனங்களின் பால்பவுடர்கள் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடிக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சீன அரசு எச்சரித்துள்ளது.
1 comment:
அகில உலக மார்க்கெட்டில் சீன பொருட்கள் விற்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது
இல்லையென்றால் சாவுடா என்று விட்டுவிடுவார்கள் கம்யூனிஸ்டுகள்
Post a Comment