Monday, September 22, 2008

கிறிஸ்துவ மதமாற்றத்திற்கு சிறார்களை ஏமாற்றி கூட்டிச் சென்றதாக 4 பேர் கைது

மதமாற்றத்திற்கு சிறார்களை கூட்டிச் சென்றதாக 4 பேர் கைது
ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 21, 2008



மடிகேரி: மதமாற்றத்திற்காக சிறார்களை கூட்டிச் சென்றதாக நான்கு பேரை கர்நாடக போலீஸார் கைது செய்து, அவர்கள் அழைத்துச் செல்லப்பட்ட ஜீப்பையும் பறிமுதல் செய்தனர்.

கர்நாடக மாநிலம் மடிகேரி மாவட்டம் எச்.டி. கோட்டை அருகே சித்தாபூரில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்கள் சிலர் மதமாற்றத்திற்காக குழந்தைகளை ஜீப்பில் அழைத்துச் செல்வதாக இந்து அமைப்பு ஒன்று போலீஸாருக்குத் தகவல் கொடுத்தது.

இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்ட வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அந்தவாகனம் ஆனந்தப்பூரிலிருந்து வந்தது. ஏராளமான 56 சிறார்கள் இருந்தனர்.

அனைவரையும் எச்.டி. கோட்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஹாஸ்டலில் சேர்க்க அழைத்துச் செல்வதாக வேனில் இருந்த கேரளாவைச் சேர்ந்த பிஜூ, இடுக்கியைச் சேர்ந்த ரோஹி தாமஸ், எச்.டி. கோட்டையைச் சேர்ந்த மீனாட்சி, குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

இதுபோல கடந்த இரண்டு வாரங்களில் 16 சிறார்களை அழைத்துச் சென்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நான்கு பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து துண்டுப் பிரசுரங்கள், சிடிக்கள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். ஜீப்பும் பறிமுதல் செய்யப்பட்டது.

தங்களுக்கு அந்தமானைச் ேசர்ந்த வர்கீஸ் என்பவர் நிதியுதவி செய்வதாகவும் நான்கு பேரும் போலீஸில் தெரிவித்துள்ளனர். எஸ்டேட் தொழிலாளர்களையும், அவர்களது குழந்தைகளையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதாகவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

கர்நாடகாவில், கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், மதமாற்றம் செய்வதற்காக சிறார்களை அழைத்துச் சென்றதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 comment:

Anonymous said...

ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.

இந்துக்கள் ஏராளமான பள்ளிக்கூடங்களை திறந்து கிறிஸ்துவத்திலிருந்து மக்களை காபபற்றவேண்டும்