Tuesday, September 30, 2008

கன்யாகுமரியிலிருந்து அனுமன் சிலையை அகற்றமுயலும் திமுக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

அனுமன் சிலையால் கன்னியாகுமரியில் பதட்டம் - போலீஸ் குவிப்பு
திங்கள்கிழமை, செப்டம்பர் 29, 2008



கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள 24 அடி உயர அனுமன் சிலையை அகற்ற அதிகாரிகள் முயன்றதற்கு இந்து அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரியில், சூரிய மறைவைக் காணும் பகுதியில், 24 அடி உயர பிரமாண்ட அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது. சைதன்ய மகா பிரபு நாம பிக்சா கேந்திரா என்ற அமைப்பு சில நாட்களுக்கு முன்பு இந்த சிலையை நிறுவியது.

இதற்கு புதுக்கிராமம், கோவளம், வாவத்துறை ஆகிய கிராமங்களைச் ேசர்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து கோவளம் பஞ்சாயத்து கூட்டப்பட்டு விவாதிக்கப்பட்டது. அப்போது சிலை இடம் பெற்றுள்ள பூங்காவுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டது.

மேலும் ஆட்சித் தலைவர் ஜோதி நிர்மலாவை சந்தித்த பஞ்சாயத்து உறுப்பினர்கள், சிலையை அகற்ற வேண்டும் என கோரி மனு கொடுத்தனர். இதுகுறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.

அதிகாரிகளும் விசாரணை நடத்தி ஆட்சியரிடம் அறிக்கை வழங்கினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் அனுமன் சிலை உள்ள பகுதிக்கு ஜேசிபி இயந்திரங்களுடன் அதிகாரிகளும், போலீஸாரும் வந்தனர்.

இத்தகவல் பரவியதும், அனுமன் சிலையை அகற்றப் போகிறார்கள் என்று கூறி இந்து அமைப்பினர் திரண்டு வந்தனர். சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களுடன் திரும்பிச் சென்று விட்டனர். இருப்பினும் எந்த நேரத்திலும் அதிகாரிகள் சிலையை அகற்றலாம் என்பதால் இந்து அமைப்பினர்அங்கேயே முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

நிலைமை பதட்டமாக இருப்பதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரத் தடுப்பு வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது.

No comments: